Skip to main content

Posts

Showing posts from October, 2019

கபாலி, காலா, அசுரன் ... எங்கே தோற்கிறார்கள்? - Uncut

வெற்றிமாறன் இயக்கி , தனுஷ் நடித்து சமீபத்தில் வெளியாகியுள்ள ‘ அசுரன் ’ திரைப்படம் சில புதிய விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது .   அசுரன் ஒரு நவயுகப் படம் .  அண்மைக்காலமாக , சாதியால் ஒடுக்கப்பட்டவர்களைக் கதாநாயகர்களாகக் கொண்டு திரைப்படங்கள் வரத் தொடங்கியிருக்கின்றன .  இதுவொரு பாராட்டத்தக்க முயற்சி .  பா . ரஞ்சித்தின் திரைப்படங்கள் இதற்கானத் தொடக்கப்புள்ளி என்று சொல்ல முடியும் .   திரைப்பட வரலாற்றறிஞர்கள் இதை மறுக்கக்கூடும் .  ரொம்ப காலத்திற்கு முன்னாடியே இது ஆரம்பித்து விட்டது என்று ஆதாரங்களைக் காட்டக்கூடும் .  ஆனால் , சாதியால் ஒடுக்கப்பட்டவன் கதாநாயகனாக மாறுவதற்கு முதலில் தான் ‘ தாழ்த்தப்பட்டவனே ’ என்பதை துணிவாகச் சொல்லத் தெரிந்திருக்க வேண்டும் .  அந்த வகையில் , நான் அட்டவணைச் சாதி தான் என்று துணிந்து சொல்கிற , சாதி விடுதலைக்காகப் போராடுகிற நாயகத் தன்மையை ரஞ்சித்தே ஆரம்பித்து வைக்கிறார் . அந்த ஆரம்பம் , மாரி செல்வராஜ் , வெற்றிமாறன் என்று தொடர்கிறது .  இந்த வகைப் படங்களை ‘ தலித் சினிமா ’ என்று வகை