Skip to main content

கபாலி, காலா, அசுரன் ... எங்கே தோற்கிறார்கள்? - Uncut




வெற்றிமாறன் இயக்கி, தனுஷ் நடித்து சமீபத்தில் வெளியாகியுள்ளஅசுரன்திரைப்படம் சில புதிய விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.  

அசுரன் ஒரு நவயுகப் படம்அண்மைக்காலமாக, சாதியால் ஒடுக்கப்பட்டவர்களைக் கதாநாயகர்களாகக் கொண்டு திரைப்படங்கள் வரத் தொடங்கியிருக்கின்றனஇதுவொரு பாராட்டத்தக்க முயற்சிபா.ரஞ்சித்தின் திரைப்படங்கள் இதற்கானத் தொடக்கப்புள்ளி என்று சொல்ல முடியும்.  

திரைப்பட வரலாற்றறிஞர்கள் இதை மறுக்கக்கூடும்ரொம்ப காலத்திற்கு முன்னாடியே இது ஆரம்பித்து விட்டது என்று ஆதாரங்களைக் காட்டக்கூடும்ஆனால், சாதியால் ஒடுக்கப்பட்டவன் கதாநாயகனாக மாறுவதற்கு முதலில் தான்தாழ்த்தப்பட்டவனேஎன்பதை துணிவாகச் சொல்லத் தெரிந்திருக்க வேண்டும்அந்த வகையில், நான் அட்டவணைச் சாதி தான் என்று துணிந்து சொல்கிற, சாதி விடுதலைக்காகப் போராடுகிற நாயகத் தன்மையை ரஞ்சித்தே ஆரம்பித்து வைக்கிறார்.

அந்த ஆரம்பம், மாரி செல்வராஜ், வெற்றிமாறன் என்று தொடர்கிறதுஇந்த வகைப் படங்களைதலித் சினிமாஎன்று வகைப்படுத்தும் கட்டுரைகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியாகத் தொடங்கியுள்ளனபன்றி, சாய்ரத் போன்ற மராத்தி படங்களை இயக்கிய நாகராஜ் மஞ்சுளேயை முன்வைத்து தலித் சினிமா என்றொரு விவாதம் முன்வைக்கப்படுகிறதுஆனால், இலக்கியத்தில்தலித் இலக்கியம்என்று பேசிப் பார்த்த அனுபவத்தில்தலித் சினிமாஎன்றொரு வகைப்பாடு இருக்க முடியும் என்று எனக்கு நம்பிக்கையில்லைசினிமா, சினிமா தானே!  

ஆனால், சாதியச் சிக்கல்களை முன்னிலைப்படுத்தும் சினிமாக்களை உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும் காட்சி மொழியில் சொல்லிவிட முடியாது என்பது மட்டும் இப்பொழுது விளங்குகிறதுரஜினி நடித்து ஏற்கனவே வெளியான கபாலி, காலா மற்றும் தனுஷ் நடித்துள்ள அசுரன் தந்த அனுபவத்தில், தமிழ் சினிமா தனது திரைமொழியை பரிசீலினைக்கு உட்படுத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

முப்பது வருடங்களுக்கு முன்பு, இதே போல இலக்கிய வெளிப்பாட்டு மொழியில் சிக்கல் வந்ததுதலித் வாழ்க்கையை இலக்கியத்தில் பதிவு செய்ய புதிய வகைமை தேவையா (தன்வரலாறு கண்டுபிடிக்கப்பட்டது), புதிய சொல்முறை தேவையா (பேச்சு மொழியில் எழுதுவது), எழுதுகிற நபர் யாராக இருக்க வேண்டும் (பிறப்பால் தலித்) என்ற விவாதங்கள் நடைபெற்று, அப்படி எழுதுவது புதிய வகை இலக்கியம் என்று மயங்கிய வரலாறு நமக்கு உண்டுஇப்பொழுதும் அப்படியே மயங்கத் தேவையில்லை.  

சாதியால் ஒடுக்கப்பட்டவர்களின் உணர்வுகளைச் சொல்ல முற்படுகையில் உருவாகும் இந்த சிக்கல் இலக்கியத்திலும் சினிமாவிலும் மட்டும் அல்ல, ஓவியத்திலும், இசையிலும், நாடகத்திலும் கூட உண்டுஇதை வெற்றிகரமாக எதிர்கொள்கிற கலை வடிவம் தனது மொழியை மேம்படுத்திக் கொள்கிறதுதலித் உரையாடலுக்குப் பின் தமிழ் இலக்கியத்தில் இது நடைபெற்றதுதற்போது, சினிமாவின் முறை.

ஒரு தலித்தின் கதையைச் சொல்ல முயலும் ஒவ்வொரு முறையும் சினிமாவில் நீங்கள் சந்திக்கும் முதற் சிக்கல் - அந்த நாயகன் எப்படிப்பட்டவன் என்பது தான்.

ஏனெனில், ஒடுக்கப்பட்டவன் குறித்து ஏற்கனவே ஒரு சித்திரம், புராணம் தொடங்கி சினிமா வரைக்கும்  இங்கே சொல்லப்பட்டிருக்கிறதுராவணன், கர்ணன், ஏகலைவன், முள்ளும் மலரும் ரஜினி, பாரதி கண்ணம்மா பார்த்திபன் (மரியாதையான உதாரணங்கள் இவ்வளவு தான்!) என்று வரிசையாக யோசித்துப் பாருங்கள்இந்தக் கற்பனைகளுக்குள் ஒரு ஒற்றுமையை உங்களால் உணர முடிகிறதாஇவர்களெல்லாம் முரடர்கள், அதே நேரம் வெகுளியும் கூடசூழ்நிலைக்கைதிகள் என்று சொல்லலாமாஇந்தக் கற்பனை இன்றைக்கு உங்களுக்கு உதவுவதில்லைஏனென்றால், உங்களுடைய ஒடுக்கப்பட்டவன் வெகுளி தான், முரடன் தான், ஆனால் அரசியலும் தெரிந்தவன்.  

அந்த அரசியல், சாதியால் ஒடுக்கப்பட்ட அத்தனை பேரின் நலன்களையும் இணைக்கிற அரசியலாக இருக்கிறது. இப்பொழுதே, அந்த நாயகனின் குணநலன்களை வடிவமைப்பதில் உங்களுக்குச் சிக்கல் வர ஆரம்பிக்கிறதுஒடுக்கப்பட்ட நாயகன், நம்மிடம் ஏற்கனவே வழக்கத்திலிருக்கும் சாகச வீரபுருசன் இல்லைஏனெனில், அவன் கலை வடிவங்கள் நிர்பந்திக்கும் ஒற்றைப் பிரதிநிதி தானே தவிர ஆபத்பாந்தவன் இல்லைஎம்ஜியார் அல்லது ரஜினி வகை கதாநாயக பிம்பங்கள் ஒடுக்கப்பட்ட நாயகனாக முடியாமல போவதும் இதனால் தான்.

ஒரு தலித்தை நாயகனாக முன்னிறுத்துவதில் உள்ள அடிப்படையான சிக்கல் இதுஏனெனில், அவன் விடுதலை அரசியலால் வடிவமைக்கப்பட்டவன் என்பதால் அவதார பிம்பத்திற்குள் அடைபட மாட்டேன் என்கிறான்.  

உதாரணமாக, அசுரன் திரைப்படத்தில் வடக்கூரானை வெட்டுவதற்காக சிறுவன் முயற்சிக்கையில், அவனது தந்தை மின்சாரத்தைத் தடை செய்யும் காட்சியை நினைத்துப் பாருங்கள்தனுஷ், மிகச் சாதுர்யமாக, மின்னல் போல யோசித்து, சாகசம் செய்யும் காட்சி உங்களுக்கு ஞாபகம் வருகிறதாஆனால், இதே காட்சியை வெக்கையில் பூமணி இப்படி எழுதுகிறார் - ‘…சேவுக்கடைகு எதிர்ல போனா காரியம் கெட்ரும்னு சத்தரத்து மறவுல நின்னுக்கிட்டேன்வெளிச்சம் வேற மனசுல உறுத்துச்சுஒண்ணும் ஓடல்டிரான்ஸ்பாரத்துப்பக்கம் போயி தட்டுத் தடுமாறி பீஸப் புடுங்குறதுக்குள்ள பெரும்பாடாப் போச்சு’.  

இது தான் யதார்த்தம்இதைத் தான் இலக்கிய மொழி என்றும் சொல்கிறோம்திரைமொழி கற்றுக் கொள்ள வேண்டியதும் இதைத் தான்அதற்குப் பெருந்தடையாக இருப்பது அதன் ஏற்கனவே வடிவமைக்கப்பட்ட நாயக பிம்பங்கள்அதை மீறுவது தான், அரசியல் படங்கள் செய்ய வேண்டிய முதல் வேலைரஜினி, தனுஷ் போன்றவர்களை வைத்துக் கொண்டு இதைச் செய்ய முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை.

இரண்டாவது சிக்கல், ஒடுக்கப்பட்ட அரசியல் கதைகளில் இடம்பெறும் வன்முறையை எவ்வாறு காட்சிப்படுத்துவது என்பதுவன்முறையைக் காட்சிப் படுத்துவதற்கும் தமிழ்த் திரைப்படங்கள் சில வாய்ப்பாடுகளை வைத்திருக்கின்றனசண்டைக்காட்சி என்பது இதற்குப் பெயர்திரையில் நீங்கள் பார்ப்பது நிஜ வன்முறை அல்லஅது ஜோடிக்கப்பட்டிருக்கிறதுஒரு சாகசக் கலையைப்போல சிங்காரிக்கப்பட்டிருக்கிறது.  

வழக்கமான தமிழ்த் திரைப்படங்கள் அவதாரக் கதைகளையே சொல்லிக் கொண்டிருப்பதால், அதில் இடம்பெறும் வன்முறைக் காட்சிகள் அந்த அவதாரங்களின் சகலகலாவல்லமையை பறைசாற்றுவது போலவே திட்டமிடப்படுகின்றனஇது, ஒரு மலினமான வன்முறையைக் கொண்டாடுதல்இந்த வழிமுறை, ஒடுக்கப்பட்ட அரசியல் படங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்துகின்றன.

ஏனென்றால், ஒடுக்கப்பட்டோரின் வன்முறை என்பது சாகசம் அல்ல என்பதை முதலில் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்அது உயிர் வாழ்வதற்காகச் செய்யப்படும் கடைசி யத்தனம்அவர்கள் அவதார புருசர்களைப் போல அந்த வன்முறைக்குப் பழகியவர்கள் இல்லைஅதனால், தப்பும் தவறுமாகவே வன்முறையைப் பிரயோகிக்கிறார்கள்.  

வெக்கை நாவல் முழுக்க, அந்தச் சிறுவன் தான் பிரயோகிக்க நினைத்த வன்முறை தவறாகப் போனதே என்று குமைந்து கொண்டே இருக்கிறான்அவன் எதிரியின் வலது கையைத் துண்டித்து, ஒற்றைக் கையுடன் நடமாடுவதைப் பார்க்க விரும்பியவன்அவன் கொடுக்க விரும்பிய தண்டனை அது தான்.  

ஆனால், தவறுதலாக எதிரி இறந்து போனதை அவனால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லைஇரக்கப்பட்டான் என்று தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம்தான் வழங்க விரும்பிய தண்டனையை அனுபவிக்காமல் எதிரி இறந்து போனானே என்பது தான் அவனுடைய வருத்தமெல்லாம்.

இது தான் ஒரு இலக்கியப் பிரதி உங்களுக்கு ஏற்படுத்தும் சவாலும்சிறுவனின் இந்த மனநிலையை சித்தரிக்கும் திரைமொழி தமிழ் சினிமாவில் இருக்கிறதா என்று கலைஞர்கள் தங்களுக்குள் கேட்டுப் பார்த்துக் கொள்ளலாம்.  
  
மற்றெல்லாப் பிரச்சினைகளுக்கும்  திரைக்கலைஞர்கள் தீர்வு சொல்வதைப் போல இப்பொழுது சாதிப் பிரச்சினைக்கும் சொல்ல ஆரம்பிக்கிறார்கள். அந்தத் தீர்வு, வழக்கம் போல, ஒடுக்குகிற சாதியை அழித்து விடுவது என்று வெளிப்படும் போது தான் அவர்களது முட்டாள்தனம் சந்தி சிரிக்கிறது

சாதியக் கொடுமைகளுக்கு எதிரான எந்தவொரு வன்முறையும் சினிமாக்களில் செய்வது போல ரசித்து ருசித்து செய்யப்படுவதல்லமனநிலைதவறியவன் அல்லது கண நேர உணர்ச்சிக்கு ஆளானவன் செய்யும் கொலைக்கும் சாதியால் துன்புறுத்தப்பட்டவன் செய்யும் கொலைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறதுஒடுக்கப்பட்டவனின் வன்முறை மனநோயாளியாக மாறிவிடாமல் இருப்பதற்கான முயற்சி என்று சாரத்தர் சொல்வது இந்த இடத்தில் ரொம்ப சரி

ஒடுக்கப்பட்டவர்களின் வன்முறை குறித்து அல்ஜீரிய சிந்தனையாளரான ஃப்ரான்ஸ் பனான் ‘The Wretched of the Earth’ என்ற நூலில் எழுதுவதை நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்அவர்,  ‘வன்முறை, தாழ்வு மனப்பான்மையிலிருந்தும் விரக்தியிலிருந்தும் ஒடுக்கப்பட்டவர்களை விடுவிக்கிறது; அவர்களை பயமற்றவர்களாக மாற்றுகிறதுசுயமரியாதையை மீட்டெடுக்க உதவுகிறதுஎன்று எழுதுகிறார்வன்முறையை இந்தக் கோணத்தில் சித்தரிக்கும் திரை மொழியைக் கண்டடையாத வரைக்கும் ஒடுக்கப்பட்டவனை சினிமாவிற்குள் நீங்கள் கொண்டு வரவே முடியாது.

மூன்றாவதாக நீங்கள் எதிர் கொள்ளும் சிக்கல், நீதி போதனை வழங்க விரும்பும் பாரம்பரிய தமிழ்ச் சினிமா மொழி என்று சொல்வேன்அசுரனில் இறுதியாய் சொல்லப்படும் முத்திரை வாக்கியம் அப்படியொரு அரைவேக்காட்டுத்தனம்ஒடுக்கப்பட்டவனை நாயகனாக முன்னெடுப்பதே ஒரு அரசியல் நடவடிக்கை என்றான பின்பு, அந்தப் படத்தில் சொல்லப்படும் ஒவ்வொரு விஷயமும் அரசியல் தான், போதனை தான் என்பதை நீங்கள் உணர வேண்டும்.

கலை, போதனைகளைப் பூடகமாகவே செய்து பழகியிருக்கிறதுஅதனால் என்றைக்குமே தீர்வுகளைச் சொல்ல முடிவது இல்லைசாதிக் கொடுமையை அம்பலப்படுத்தும் சினிமாக்கள் சாதிப் பிரச்சினைக்கு தீர்வு சொல்லிவிட முடியுமா என்றால் நிச்சயமாய் முடியாது என்று தான் சொல்ல வேண்டும்பின், கலை என்ன தான் செய்ய முடியும்அது யாரை நோக்கி என்ன தான் பேச விரும்புகிறது என்ற கேள்வி எழலாம்.

சாதியப் பிரச்சினையைப் பேசுகிற கலை வடிவங்கள், சாதிக் கொடூரர்களை திருத்த முனைவது அல்லஅக்கொடூரர்களை அரசும் நீதிமன்றங்களுமே தடுத்த நிறுத்த முடியும்.  

ஆனால், மிகவும் சிக்கலான சாதி போன்ற பிரச்சினைகளை, எந்தவித நுண்ணுணர்வும் இல்லாமல், பழக்க தோசத்தால் செய்து கொண்டிருக்கும் வெகுஜனங்களை நோக்கியே ஒரு கலை வடிவம் பேச விரும்புகிறதுஅவர்கள் தான்தோன்றித்தனமாய், மரபு, பாரம்பரியம் என்ற பெயரில் செய்து கொண்டிருக்கும் அநாகரீக வழக்கங்களின் கீழ்மையை அவர்களுக்கு உணர்த்த முடியும்அவ்வழக்கங்களின் காரணமாக ஒரு பகுதி மக்கள் எத்தனை தூரம் ஒடுக்கப்படுகிறார்கள் என்பதை சுட்டிக் காட்ட முடியும்இவ்வளவு தான் கலையின் பங்குஆனால், இது நடந்தாலே பெரிய விஷயம்.


அதே நேரம், இத்தகைய அரசியல் படங்கள், ஒடுக்கப்படுகிறவனுக்கு என்ன உணர்வை வழங்குகின்றன என்பதும் முக்கியம்அது, என்றைக்கும் ஒடுக்கப்பட்ட யதார்த்தத்தை ஒரு கொடுப்பினையாக அவன் உணரச் செய்து விடக்கூடாதுஇத்தகைய கலைவடிவங்கள், அவன் வெகுஜன சமூகத்தோடு உரையாடுவதற்கான வாய்ப்பை மட்டுமே வழங்க முடியும்.  

ஒரு சினிமாவை எடுப்பதம் மூலம், ஒடுக்கப்பட்டவன் தனது சுயமரியாதையை மீட்டெடுக்கிறான், தாழ்வு மனப்பான்மையிலிருந்தும் விரக்தியிலிருந்தும் விடுபடுகிறான், பயமற்றவனாக மாறுகிறான் என்று நீங்கள் சொல்ல விரும்பினால், மீண்டும் பனானைத் தான் நான் உதாரணம் காட்டுவேன் - சினிமா எடுப்பது வன்முறை அல்லஏனென்றால், கலைஞன் வன்முறையாளன் அல்லஒரு வேளை வியாபாரி அப்படி இருக்கலாம்.

Comments

Popular posts from this blog

பால்ய கரகாட்டக்காரி கௌசல்யாவின் கதை

‘நாட்டார் கலைஞர்கள் எவ்வாறு உருவாகுகிறார்கள்?’ என்று தேடிக் கொண்டிருந்த போது தற்செயலாகத்தான் கௌசல்யாவை சந்தித்தேன். ‘நானும் கலைஞர் தான், சார்’ என்று வந்து நின்ற சிறுமிக்கு பதிமூன்று, பதினான்கு வயது இருக்கலாம். ‘நீயா?’ ‘ஆமா, சார்’, சங்கோஜத்தோடு சொன்னாள். நான் சந்தேகப்படுகிறேன் என்று தெரிந்ததும், பக்கத்தில் நின்றிருந்த மாரியம்மாளை ‘நீ சொல்லும்மா, அப்ப தான் நம்புவாங்க’ என்பது போல பார்த்தாள். அதற்கு மாரியம்மா, ’ரெண்டு வருசமா இவ ஆடி தான் சார் சாப்புடுறோம்’ என்றார்.  சிறுமி கெளசல்யா, ஒரு கரகாட்டக் கலைஞராம்!   அந்தத் தற்செயல் இப்படித்தான் நடந்தது.  ஒரு பால்ய கரகாட்டக்காரியை நான் முதல் முறையாகச் சந்திக்கிறேன். ************ நான் பார்க்க வந்தது மாரியம்மாளை.  அவர் ஒரு மேனாள் கரகாட்டக்கலைஞர்.  வயது ஐம்பதுக்குள் இருக்கலாம்.  கரகாட்டக்கலைஞர்கள் சீக்கிரமே ஓய்வு பெற்றுவிடுகிறார்கள். பெண் கலைஞர்கள் என்றால் இன்னும் வேகமாக, முப்பத்தைந்தை தாண்ட மாட்டார்கள்.   'ஓய்வு' என்பது கூட தவறான வார்த்தை தான்.     நாட்டார் கலைஞர்களுக்கு 'ஓய்வு' என்பதே கிடையாது.  கலைஞர்க

5 கலவரங்களும் கதையாடல்களும்

5   கலவரங்களும் கதையாடல்களும்  க . இராமபாண்டி   விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டத்தில் புதுப்பட்டி எனும் ஊர் உள்ளது . இவ்வூரில் 18 வகைச் சாதியினர் உள்ளனர் . இங்கு 1918ஆம் ஆண்டிலிருந்து 2000ம் ஆண்டு வரை பல்வேறு காரணங்களால் சாதிய மோதல்கள் நடைபெற்று வந்துள்ளன .   1918 - ஆம் ஆண்டு பறையர்களுக்கும் (அப்பொழுது 70 குடும்பங்கள்) பண்ணாடிகளுக்கும் (150 குடும்பங்கள்) சுடுகாட்டுப் (பறையர்கள் பயன்படுத்திய சுடுகாட்டை பண்ணாடிகள் பயன்படுத்தியதால்) பிரச்சினை ஏற்பட்டு பண்ணாடி சமூகத்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர் . காவல் துறையினர் பறையர்களில் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்கின்றனர் .   காவல் துறையினரின் தொந்தரவு தாங்கமுடியாமல் , பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருவில்லிப்புத்தூர் பங்குத் தந்தை பிரெஞ்சுச் சாமியார் மாஜி அருளப்பரைச் சந்தித்து ‘நாங்கள் கிறித்தவ மதத்திற்கு மாறுகிறோம் . எங்களை காப்பாற்றுங்கள் ’ என்று கூறுகின்றனர் . மாஜி அருளப்பர் காவல் நிலையத்திற்குச் சென்று , ‘பிரச்சினை என்பது இரு பிரிவினருக்கும் தான் . ஆதலால் , இரு பிரிவினர் மீதும் வழக்குப் பதிவு செய்யுங

வன்முறையை வன்முறையாலும் புனைவை புனைவாலும்... தேவேந்திரர் புராணம்!

தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி? (‘இந்திர தேச சரித்திரம்’ என்ற தொடர் கட்டுரையிலும், ‘பறையர் என்ற பெயரின் உற்பவம்’ என்ற கட்டுரையிலும் பிராமண எதிர்ப்பின் வரலாற்றை கோவில் உரிமைகள், பூஜை புனஸ்காரங்கள் சார்ந்து ஒரு புனைவு போல அயோத்திதாசர் சித்தரித்திருப்பார்.  இப்படியான வரலாறு குறித்து என்னிடம் சில கேள்விகள் இருந்தன:   ‘சாதித் துவேசம் என்பது பிராமணர்களின் சதி’ என்ற வாதம் எவ்வளவு தீர்க்கமான உண்மை? பறையர் சாதிக்கு சொல்லப்படுவது போல தமிழகத்தின் அத்தனை சாதிகளுக்கும் தனித்தனியே ‘பிராமண எதிர்ப்பு’ வரலாறு இருக்க முடியுமா?  அப்படி இருந்தன என்றால் அவை எங்கே? இல்லை என்றால் ஏன் இல்லை?  இதற்காக, வேளாண் சாதி என்று தங்களைப் பெருமையாக அடையாளப்படுத்திக் கொள்ளும் தேவேந்திரர்கள் ‘பிராமண சூழ்ச்சியால்’ இன்றைய இழிநிலையை அடைந்தார்கள் என்று தொனிக்கக்கூடிய புனைவரலாறு ஒன்றை ‘தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி?’ என்ற பெயரில் எழுதினேன்.  அதை அம்மக்கள் மத்தியில் பரவவும் செய்தேன். ஆதியில் அவர்கள் பெளத்தர்களாக இருந்தார்கள் என்றும், போலி பிராமணர்களின் சூழ்ச்சியால் இத்தாழ்நிலை அடைந்தார்கள் என்றும் என்னால் ஏறக