Skip to main content

எழுத்து அரசியல் 2 : நவீன தமிழ்ச் சூழலில் தலித் இலக்கியம் - பாகம் 22.  இலக்கியமும் அரசியலும் - மராத்திய தலித் இலக்கியத்தை முன்வைத்து :
மராத்திய தலித் இலக்கிய வரலாற்றைப் பற்றி பேசுகையில் அர்ஜுன் தாங்ளே பேருவகையோடு குறிப்பிடும் தகவலொன்றை நாம் கவனிக்க வேண்டும். தலித் இலக்கியத்தின் முப்பெரு காலங்களைப் பேசுகின்ற அந்த விரிவான கட்டுரையில் ‘1972ம் ஆண்டு மும்பையில் தோற்றுவிக்கப்பட்டதலித் சிறுத்தைகள்என்ற அரசியல் இயக்கம் தலித் இலக்கியவாதிகளாலேயே உருவாக்கப்பட்டது; தலித் இலக்கிய இயக்கமே பின்னாளில் வ்வாறு அரசியலமைப்பாக உருப்பெற்றது; அதனுடைய தலைவர்களெல்லாம் எழுத்தாளர்களாக இருந்தனர்என்று பதிவு செயும் தாங்ளே இந்திய வரலாற்றில் படைப்பிலக்கியவாதிகள் அரசியலில் நேரடியாகப் பங்கு பெற்று அரசியல் இயக்கமொன்றை வழிநடத்துவதென்பது இதுவே முதன்முறையாக இருக்குமென்றும் எழுதுகிறார்.
அர்ஜுன் தாங்ளேயின் இந்தக் கணிப்பு ஒரு வேளை பிழையுடையதாகவும் இருக்கலாம். நான் அது குறித்த விவாதத்திற்கு வராமல் வேறொரு தகவலை மையப்படுத்த விரும்புகிறேன். ‘கலைஎன்பதைக் கண்டடைந்த காலத்திலிருந்து இன்று வரையிலும் மனித சமூகம் தொடர்ச்சியாக விவாதித்து வரும் விஷயமொன்றை மராத்திய தலித் இலக்கிய இயக்கம் தொட்டிருப்பதாக அவர் கருதுகிறார். அதாவது கலைகள் (ந்தத் தருணத்தில் இலக்கியம்) நேரடியான சமூக செயற்திட்டங்களோடு தொடர்புடையவையா என்ற விவாதத்தில் ‘மராத்திய தலித் இலக்கியவாதிகள் தங்களது சமூகக் கடமைகளை நிறைவேற்றிக் காட்டினார்கள்’ என்று அர்ஜுன் தாங்ளே எழுதிச் செல்கிறார்.
இலக்கியத்திற்கும் சமூகத்திற்குமான உறவை மையப்படுத்திய வ்விவாதம் வெவ்வேறு தொனிகளில் எல்லா மொழியினுள்ளும் நடைபெற்று வருவதை நம்மால் அறிய முடியும். கலை யாருக்காக செயப்படுகிறது? மக்களுக்காகவா அல்லது கலைக்காகவா என்று நிறைவேறிய வாதப் பிரதிவாதங்களை நாம் அறிவோம். இலக்கியவாதிக்கு சமூகக் கடமையென்று ஏதேனும் உள்ளதா? அப்படியொன்று இருக்க வேண்டுமா? என்று கேட்கப்பட்ட கேள்விகள் நமது சூழலில் கூட ஏராளம் உண்டு.
இலக்கியம் நேரடியான விளைவுகளை ஏற்படுத்த முடியுமா / முடியாதா என்ற கேள்விக்கு இரண்டு விதமான பதில்களும் உண்டு. கலைக்கும் பொருளார்ந்த சங்கதிகளுக்கும் என்றைக்குமே தொடர்பிருந்ததில்லை. அவ்வாறு தொடர்பு கொண்டிருப்பவை கலைகளே அல்ல. கலை என்பது சமூகப் பண்பாட்டு அரசியல் எல்லைகளைக் கடந்த உன்னத வெளியில் ஞ்சரிக்கும் மானுட உணர்வு என்று பேசும் வேதாந்திகளையும் நமக்குத் தெரியும். ஆனால் மராத்திய தலித் இலக்கியவாதிகள் அரசியல் நிகழ்வுகளில் ஈடுபட்டுதலித் சிறுத்தைகள்என்ற அமைப்பைக் காட்டினர் என்ற வரலாற்றுப் பதிவு தலித்இலக்கியத்திற்கும் உடனடியான சமூகச் செயல்பாட்டிற்குமான தவிர்க்கவியலாத உறவையே காட்டுவதாக நினைக்கிறேன். சமூகப் பங்களிப்போ அல்லது எதிர்வினையோ அற்ற தலித்இலக்கியம் சாத்தியமில்லை என்றே நாம் இதனை விளங்கிக் கொள்ள வேண்டும். பிறஇலக்கிய வகைகள் சொல்லிக் கொள்வது போல்காலத்தைக் கடந்தும் நிற்கிற / ‘மானுட உன்னதங்களை மட்டுமே பேசுகிற / ‘ஆத்மார்த்தமான / ‘சுய தேடல்களுக்கான சாத்தியங்களை கொண்டிருக்கிறஎழுத்து என்று தலித் எழுத்துகளை வர்ணிக்க முடியாது என்றே தோன்றுகிறது.
இலக்கியப் பிரதிக்கு அரசியல் உண்டா என்ற கேள்வி மேற்கத்திய உலகங்களில் இருபதாம் நூற்றாண்டின் மத்திய காலங்களில் கேட்கப்பட்டதை நாம் நினைவுபடுத்திப் பார்க்கலாம். பிரதிகளின் செயல்பாடு குறித்தும் அப்பிரதிகளில் வெளிப்படும் கருத்துருவங்களின் நிலைப்பாடுகள் குறித்தும் மிகப்பெரிய விவாதங்களை எழுப்பிய பின்னை நவீனத்துவ சிந்தனைகளிலிருந்து முகிழ்த்தகட்டுடைத்தல்போன்ற இலக்கியத் திறனாய்வு முறையியல்கள் எல்லாப் பிரதிகளும் தங்களுக்குள்ளே பூடகமான அரசியலைக் கொண்டுள்ளன என்று அறிவித்ததை நாம் அறிவோம். இதன் மூலம் எல்லாப் பிரதிகளும் அரசியல் பிரதிகளே என்ற நிலைப்பாடு வலுவடைந்தது நமக்குத் தெரியும். அந்த வகையில், ‘தலித் இலக்கியப் பிரதிகளுக்கும் அரசியல் உண்டு தானே; பிறகென்ன மராத்திய தலித் இலக்கியம் முதன் முறையாக அரசியலுக்குள் அடியெடுத்ததுஎன்று சிலருக்குத் தோன்றலாம்.
ஆனால் தலித் இலக்கியத்திற்காக சொல்லப்படும் அரசியல் பிற பிரதிகளுக்கு வாய்த்திராத வேறொரு அரசியல் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். எல்லாப் பிரதிகளும் அரசியலுடையவையே என்று சொல்லும்பொழுது நாம் கருத்தியல்களின் அரசியலையே கவனப்படுத்துகிறோம். ‘சிந்தனையளவில் நடைபெறும் கருத்துருவ அரசியலில் மறைமுகமான ஆனால் வலுவான நிலைப்பாட்டை எல்லாப் பிரதிகளும் கொண்டுள்ளனஎன்பதிலுள்ள அரசியலுக்கும் மராத்திய தலித் இலக்கியவாதிகள் குறிப்பிடும் அரசியலுக்கும் வேறுபாடுகள் உள்ளன.
சிந்தனையளவிலான அரசியல், இலக்கியப் பிரதிகளை மட்டுமே குறிவைப்பதையும், இலக்கியவாதி இக்காலகட்டத்தில் ஏறக்குறைய,றந்து போனதாகக் கருதப்பட்டதையும் நாம் மறந்துவிடலாகாது. ஆனால் மராத்திய தலித் இலக்கிய வரலாற்றில் தலித் இலக்கியவாதிகளே அரசியல் இயக்கங்களைக் கட்டுகின்ற வேலையைச் செது கொள்வதைக் கவனியுங்கள். ஒன்று பிரதிகளின் அரசியல் என்றால் மற்றொன்று படைப்பாளிகளின் அரசியல். பிரதிகளின் அரசியல் கருத்தியல் தளத்தில் நடைபெறுவதாகவும் படைப்பாளிகளின் அரசியல் செயற்தளத்தில் நடைபெறுவதாகவும் நாம் சொல்லிக் கொள்ளலாம்.
மராத்திய தலித் இலக்கிய வரலாற்றின் முதன்மையானக் கூறாக விளங்கும் தலித் எழுத்தாளர்களின் அரசியல் பாத்திரம்’ என்றதிலிருந்து சில அடிப்படையான தலித் இலக்கியக் குணங்களை நாம் அடையாளப்படுத்த முடியுமென்று நினைக்கிறேன். முதலாவதாக பின்னை நவீனத்துவம் குறிப்பிடுவது போன்ற படைப்பாளிக்கும் படைப்பிற்குமான இடைவெளியை தலித் இலக்கியத்துள் நாம் கண்டுணர முடிவதில்லை. அதாவது தவிர்க்கவியலாத வகையில் தலித் இலக்கியப் பிரதியானது படைப்பாளியை சுமந்து கொண்டே நிற்கிறது. படைப்பாளியின் அடையாளமே ஒரு இலக்கியப் பிரதியை தலித் பிரதி / தலித்தல்லாத பிரதி என்று வகைப்படுத்துவதை நாம் காண்கிறோம்.
இரண்டாவதாக, எழுதப்பட்ட பிரதியை விடவும் பிரதியை எழுதும் செயலே இங்கு மையப்படுத்தப்படுகிறது. அதாவது எழுதப்பட்டபிரதி வாசகப் பரப்பினுள் ஏற்படுத்தும் விளைவுகளைக் காட்டிலும் வெகுகால மௌனத்திற்குப் பின் எழுத்தை வெளிப்பாட்டு சாதனமாகக் கையாளும் தலித்என்ற சித்திரம் வழங்கக்கூடிய அதிர்வுகளே பெருமளவில் சிலாகிக்கப்படுகிறது. இதனால் தலித் இலக்கிய விவாதங்களில் பெரும் பகுதி, எழுத்தை உயர் சாதியினர் கையகப்படுத்திய வரலாற்று நிகழ்வு குறித்தும் தலித்துகளுக்கு நீண்டகாலமாக எழுத்தைக் கையாளும் உரிமை வழங்கப்படாதது குறித்தும் அமைவதோடு, இன்றைய காலகட்டத்தில் புதிதாக எழுத வரும் தலித்துகளின் பக்குவமற்ற எழுத்து முறையை’ குழந்தையின் மழலையாகப் பாவித்து விதந்து போற்றுவதுமாக கழிவதை நாம் அவதானிக்கலாம். தலித் இலக்கியங்களைப் பொறுத்த அளவில் உருவாக்கப்பட்ட பிரதி அல்ல, பிரதிகளை உருவாக்கும் செயலே முதன்மையானதாக மாறிப் போகிறது.
மூன்றாவதாக, தலித்இலக்கியங்கள் காலாதீதமானவை அல்ல; மாறாக நிகழ்காலத் தேவைகளையே பிரதானமாகக் கொண்டவை. படைப்பிலக்கியங்கள் காலத்தை வெல்பவை; சாகாவரம் பெற்றவை என்பவை போன்ற விளக்கங்களையும் அவற்றிற்கு ஆதாரமாகச் சொல்லப்படும் சான்றுகளையும் நாம் திகட்டத் திகட்ட கேட்டிருக்கிறோம். இலக்கியங்களின் காலாதீதம்எழுத்து என்ற வடிவத்தினாலேயே சாத்தியமாகிறது என்று சிலர் நம்புகின்றனர். பேச்சையும் எழுத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது பேச்சு நிகழ்காலத் தன்மையோடு, கணநேரம் மட்டுமே உயிர் வாழும் ஊடகம் என்றும்,எழுத்துநிலையான, அழிக்கமுடியாத ஊடகம் என்றும் கற்பனை செகிறார்கள். இதனையொட்டியே, ‘இலக்கியப் பனுவல்களின் ஆதார குணம் - அவை காலத்தை வென்று நிற்பதுதான்என்பது வலியுறுத்தப்படுகிறது.
இத்தகைய வாதத்தின் பின்னால் கண்ணாமூச்சி காட்டுகின்ற அரசியலை நாம் எளிதாகவே புரிந்து கொள்ள முடிகிறது. இலக்கியம் காலாதீதமானது என்று சொல்வதன் மூலம் அது அழிவற்றது; இயற்கையைப் போன்றது; அபூர்வமானது; ஏறக்குறைய கடவுளைப் போன்றவொரு கைகளால் செயப்பட்டது என்று எழுத்தாளன் தன்னைபடைப்பாளியாக ஊதிக்காட்ட முடிகிறது. அதே போல இலக்கியப் பிரதிக்கும் சமூகப் பண்பாட்டு அரசியல் நிகழ்வுகளுக்கும் வ்வித நேரடித் தொடர்பும் இருக்கவியலாது என்றும் அது உடனடியாக விளைவிக்கக்கூடியது என்று எதுவுமில்லை என்றும் கண்ணுக்குப் புலப்படாத உருமாற்றங்களை ஏற்படுத்துவதே அதன் உள்ளக்கிடக்கை என்றும் தினசரி வாழ்க்கை போன்ற லௌகீக வியங்களில் அக்கறை காட்டுபவை அல்ல என்றும் சொல்லப்பட்ட பல விளக்கங்களும் ஒரு இலக்கியப் பிரதியின் சமூகக் கடமையை மறுக்கும் அரசியல் சார்ந்தது. ஆனால் மிகத் தெளிவாக விளங்கும்படி தலித் இலக்கியங்கள் நிகழ்காலத் தன்மையுடையவை; நேரடியான அரசியல் கோட்பாடுகளைக் கொண்டவை; மேலும் உடனடியான விளைவுகளை நோக்கமாகக் கொண்டவை.
மராத்திய தலித்இலக்கிய இயக்கத்தின் வரலாற்றைப் பேசுகின்ற பலரும் நான்கு காரணிகளைக் கட்டாயமா குறிப்பிடுகின்றனர்; மராத்திய நவீன இலக்கிய மொழி நடையின் தாக்கம், சிறு பத்திரிகைச் சூழல், முற்போக்கு எழுத்தாளர்களின் இருப்பு, மற்றும் தலித் உட்சாதிப் பிரிவுகள். இந்நான்கு காரணிகளும் தலித் இலக்கிய வரலாற்றில் முக்கியப் பங்கினை வகிப்பதாக அர்ஜுன் தாங்ளேயும் குறிப்பிடுகின்றார். வேறுசில இந்திய மொழிகளைப் போலவே மராத்திய நவீன இலக்கியமும் பார்ப்பன எழுத்தாளர்களின் பிடியிலேயே இருந்து வந்திருக்கிறது. தமிழிலும் பிரபலமாயிருந்த காண்டேகர் போன்ற எழுத்தாளர்களின் பிடியினின்று விடுபட்டு தங்களுக்கான தனித்துவ கதையாடலை உருவாக்குவதென்பது மராத்திய தலித் இலக்கியவாதிகளுக்குப் பெரும் சவாலாக இருந்ததைக் குறிப்பிடும் தாங்ளேசில தலித்துகள் பார்ப்பனர்களைப் போல பேசவும், வாசிக்கவும், எழுதவும் தலைப்பட்டு தங்களையே பார்ப்பனமயமாக்கிக் கொண்டார்கள். தங்களது கடந்த காலத்தை மறந்து விடவே அவர்கள் விரும்பினார்கள். யதார்த்தத்தை நேருக்கு நேராக சந்திக்கும் திராணியற்றவர்களாக இருந்தார்கள்,’ என்கிறார். இது போன்ற தொடக்ககாலத் தடைகளைத் தாண்டியே மராத்திய தலித் இலக்கியம் உருவாக முடிந்தது.
ஏறக்குறைய இதே போன்றதொரு சந்திப்பை மராத்திய சிறு பத்திரிகைச் சூழலோடும் மராத்திய தலித் இலக்கியம் மேற்கொண்டது.  ச்சந்திப்பை விவரிக்கக்கூடிய அர்ஜுன் தாங்ளேசிறு பத்திரிகைகளின் நிறுவனங்களுக்கு எதிரான கலகக் குரல் தலித் இலக்கியங்களில் வெளிப்பட்ட கலகக் குரலுக்கு நெருக்கமாக ஒலித்ததால், பெரும்பான்மையான மராத்திய தலித் எழுத்தாளர்கள் சிறு பத்திரிகைகளில் எழுதக் கூடியவர்களாக இருந்தனர். ஆனால் நாளடைவில் தலித் எழுத்தாளர்கள் சிறு பத்திரிகைச் சூழலிலிருந்து வெளிவரவேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டது. சிறு பத்திரிகைக்காரர்களின் நிறுவனமயத்திற்கு எதிரான கலகக்குரல் தனிநபர்களுக்கு எதிரானக் குரல்களாக சுருங்கிப் போனதால் ஏற்கனவே வடிவமைக்கப்பட்ட எழுத்து முறை - அழகியல்முறைகளுக்கு எதிரானக் குரல்களாக மட்டுமே தேங்கிப் போனதால் வெற்று அதிர்வுகளை மட்டுமே எழுப்பும் தன்மையில் பாலியல் தொடர்பான சொற்களை தைரியமாகப் பயன்படுத்துவது மட்டுமே என்று திரிந்ததால் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் மராத்திய தலித் இலக்கியம் சிறு பத்திரிகைச் சூழலிலிருந்து பிரிந்து வந்து பயணிக்க வேண்டியதாயிற்று,’ என்கிறார்.
ஒடுக்குதலையும் சுரண்டலையும் எதிர்த்தே மராத்திய முற்போக்கு இலக்கியங்கள் உருவாக்கப்பட்டிருந்தன என்றாலும் சில அடிப்படையானக் கோளாறுகளால் தலித் எழுத்தாளர்கள் முற்போக்கு இலக்கியங்கள் குறித்து அவநம்பிக்கையே கொண்டிருந்ததாக தாங்ளே குறிப்பிடுகிறார். மார்க்சிய தத்துவத்தின் செறிவான பின்புலத்திலிருந்தே முற்போக்கு இலக்கியங்கள் இயங்கின என்றாலும் உயர்சாதியினரின் ஆக்ரமிப்பாலும் பொருளாதார முரணுக்குள்ளேயே எல்லாவற்றையும் விளக்க விரும்பியதாலும் இந்தியச் சூழலில் சாதிக்கான முக்கியத்துவத்தை கணக்கிலெடுக்கத் தவறியதாலும் மராத்திய முற்போக்கு இலக்கிய இயக்கம் வ்வித காத்திரமான பாதிப்பையும் தலித் இலக்கிய வகையின் மீது எழுப்பியிருக்கவில்லை.
மராத்திய தலித் இலக்கிய வளர்ச்சிப் போக்கில் மேற்கூறப்பட்ட நான்கு காரணிகளை மீறியும் சில நிகழ்வுகள் அடையாளப்படுத்தப்படுகின்றன. மராத்திய தலித் உட்சாதிப் பாகுபாடுகளும் மோதல்களும் கணிசமான பின்விளைவுகளை ஏற்படுத்தியிருந்தன. மகார் என்ற தலித் உட்சாதியே (அம்பேத்கர் பிறந்த சாதி) மராத்திய தலித் உலகை ஆக்ரமித்ததாக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதனால்மராத்திய தலித் இலக்கியம்என்று சொல்லப்படுவது ஒரு சாதி இலக்கியமாகப் பார்க்கப்பட்டதும் நடந்தது. இதே போன்று பௌத்தர்களாக மாறிய தலித்துகளே தலித் இலக்கியத்தை ஆட்கொண்டிருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் சொல்லப்படுகின்றன.
மராத்திய தலித்இலக்கியத்தின் வரலாற்றைப் பார்க்கையில் எனக்கு சில நுணுக்கமான செய்திகளை அடையாளப்படுத்த முடியுமென்று தோன்றுகிறது. வ்வாறு அடையாளப்படுத்துவதன் மூலம்தலித் இலக்கியம்என்ற வகைமையின் ஆதார குணங்களை நாம் வடிவமைக்க முடியுமென்றும் நான் நினைக்கிறேன்.
1. தலித் இலக்கியப் பிரதியின் நிகழ்காலத் தன்மை: நான் ஏற்கனவே மேலே குறிப்பிட்டதைப் போல் காலத்தை வெல்லும் சாகாவரம் பெற்ற சமூகப் பண்பாட்டு அரசியல் சூழல்களைக் கணக்கிலெடுக்காத அந்தரத்தில் மிதக்கும் அழகியலோடு கூடிய இலக்கிய உருவாக்கத்திற்கு நேரெதிரானது தலித் இலக்கியம். இது நிகழ்காலம் சார்ந்தது. எனவே உடனடியான விளைவுகளை எதிர்நோக்கியது - உருவாக்குவது. வாசகர்களின் அரசியல் நிலைப்பாட்டை உரசிப் பார்ப்பது. இது நாளைக்கான இலக்கியமல்ல;  இன்றைக்கான இலக்கியம்.
2. தலித் இலக்கியவாதியின் அரசியல் பாத்திரம்: வேறெந்தவொரு எழுத்தாளனையும் போல் தலித் எழுத்தாளனும் தன்னை அரசியலுக்கு அப்பாற்பட்டவன் என்று சொல்லிக் கொள்ள முடிவதில்லை. ஏனெனில் எழுத்தை அரசியல் ஆயுதமாகவே பயன்படுத்துவதுதான் தலித் இலக்கியம். பிற இலக்கியக் கோட்பாடுகள் சொல்வது போல் பார்வையாளனாக / பதிவாளனாக இருந்து போவதை தலித்இலக்கியம் ஆதரிப்பதில்லை. தலித் எழுத்தாளன் தனது எழுத்தை சமூகத்திற்குள் ஊடுறுவுவதற்கான தொடக்கப் புள்ளியாகவே பயன்படுத்துகிறான்.
3. தலித் இலக்கியங்களின் மொழி தனித்துவமானது: ஏற்கனவே கட்டப்பட்டுள்ள உயர்சாதி இலக்கிய மொழியை மறுதலிக்க வேண்டிய நிர்பந்தம் தலித் இலக்கியத்திற்கு இருக்கிறது. அதே போல சிறு பத்திரிகைகளின் பம்மாத்து காட்டும் கலக மொழியையும் மீறி மாற்று மொழியொன்றை தேர்ந்து கொள்ள வேண்டியது தலித் இலக்கியத்தின் இன்றியமையாத பணியாகிறது. அதாவது, தலித்இலக்கியத்தின் மொழியானது அதன் உள்ளடக்கத்திற்கு நேர்மை செய்வதோடு அதை வாசிக்கும் வாசகருக்கு நெருக்கமானதாகவும் இருக்க வேண்டியுள்ளது.
4. தலித் இலக்கியம் தனித்த அடையாளங்களை அல்ல; கூட்டு அடையாளங்களையே முன்னிறுத்துகிறது: தனி அடையாளங்கள் என்பதை இரண்டு வகைகளில் புரிந்து கொள்ள வேண்டும் - ஒன்று தனி நபர் அடையாளம்; மற்றொன்று தனி சாதி அடையாளம். பிற எழுத்திலக்கியங்கள் போல் தலித் இலக்கியம் தனி மனித உணர்வுகளை மையப்படுத்தியவை அல்ல. அதன் கதாபாத்திரங்கள் தனி நபர்கள் அல்ல; அவர்களது அனுபவங்கள் அவர்களுக்கானது அல்ல; அவர்களது கோபம் / வருத்தம் / வலி / நகை என்று அனைத்தும் கூட்டு அடையாளங்களுக்கானவை. பெரும்பாலும் தலித் இலக்கிய பாத்திரங்கள் வகை மாதிரிகளாகவே உருமாறுகின்றன. இதன் உச்சபட்ச வெளிப்பாடே தலித் சுயசரிதைகள். அவையனைத்தும் தனிநபரின் கதைகள் அல்ல; மாறாக சமூகங்களின் ஒட்டுமொத்த வாழ்பனுபவமாகவே அமைந்து விடுகின்றன.
(தொடரும்)

Comments

Wtm said…
எதற்காக உயர்ஜாதி இனத்தவர்கள் திருவள்ளுவர், ஔவையார்,நந்தனார் பறையர்
இல்லை என்று கொக்கரிகின்றார்கள் ? ஒரு தலித் சான்றோனாக இருக்கக் கூடாதா?
ஏண்டா நீங்க மட்டும்தான் எல்லாவற்றிலும் இருக்க வேண்டுமா? திருவள்ளுவர்
பறையர் என்பதினால் தமிழகத்தில், அதிக அரசுப் பேருந்துகளில் திருக்குறளை
புறக்கணித்து வருகின்றார்கள்.

Popular posts from this blog

இளையராஜாவை வரைதல் - 1

ஒன்று
‘ராஜாவின் காதல் கீதங்கள்’ - ‘ராஜாவின் அம்மா பாடல்கள்’ என்ற இரண்டு பாடல் தொகுப்புகள் இல்லாத ராஜா ரசிகன் இந்தப் பிரபஞ்சத்திலேயே இல்லை. 
‘அட, ஆமா’ என்பவர்களுக்கு ஒரு அறிவிப்பு - இந்தக் கட்டுரை உங்களைப் பற்றியது தான்.
‘இல்லயில்ல’ என்று சொல்பவர்கள் தொடர்ந்து கட்டுரையைப் படியுங்கள், இது உங்களுக்காகத் தான் எழுதப்படுகிறது.
‘ஆமா, இல்ல!’ என்பவர்களுக்கு ஒரு கெட்ட செய்தி -  இந்தக் கட்டுரையை நாம் தான் எழுதிக் கொண்டிருக்கிறோம்.
*
‘ராஜா பாடல்கள்’ என்பது ஒரு வெகுஜன கலை வடிவம். இதை உருவாக்கியது இளையராஜா இல்லை, அவரது ரசிகர்கள்! எனவே காப்புரிமை பிரச்சினைக்கெல்லாம் அப்பாற்பட்டது அது.
வெவ்வேறு திரைப்படங்களில், வெவ்வேறு காரணங்களுக்காக இளையராஜாவால் உருவாக்கப்பட்ட பாடல்களைத் தேர்ந்தெடுத்து,  அவரது ரசிகர்கள் ஏறக்குறைய ஒரு புதிய வகைக் கலைப்படைப்பை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.  அதற்குத் தான் ‘ராஜா பாடல்கள்’ என்று பெயர்.   
இந்தத் தொகுப்புகளை உருவாக்குவதற்கோ அல்லது கேட்பதற்கோ, அவை எந்தத் திரைப்படங்களில், எந்த நடிகர்களுக்காக, எந்தப் பாடகர்களால் பாடப்பட்டன என்ற விபரமெல்லாம் உங்களுக்குத் தேவைப்படுவதில்லை.   கொஞ்சம்…

கபாலி, காலா, அசுரன் ... எங்கே தோற்கிறார்கள்? - Uncut

வெற்றிமாறன்இயக்கி, தனுஷ்நடித்துசமீபத்தில்வெளியாகியுள்ள ‘அசுரன்’ திரைப்படம்சிலபுதியவிவாதங்களைஏற்படுத்தியிருக்கிறது.  
அசுரன்ஒருநவயுகப்படம்.  அண்மைக்காலமாக, சாதியால்ஒடுக்கப்பட்டவர்களைக்கதாநாயகர்களாகக்கொண்டுதிரைப்படங்கள்வரத்தொடங்கியிருக்கின்றன.  இதுவொருபாராட்டத்தக்கமுயற்சி.  பா.ரஞ்சித்தின்திரைப்படங்கள்இதற்கானத்தொடக்கப்புள்ளிஎன்றுசொல்லமுடியும்.  
திரைப்படவரலாற்றறிஞர்கள்இதைமறுக்கக்கூடும்.  ரொம்பகாலத்திற்குமுன்னாடியேஇது

ஜல்லிக்கட்டும் இந்தியக் காலனியமும்

(ஜல்லிக்கட்டு பற்றி முக நூலில் எழுதிய ஒரு சிறு குறிப்பிற்குப் பின் நடைபெற்ற உரையாடல் இது.  ஒரு ஆவணப்படுத்தலுக்காக இங்கே பதிந்து வைத்துக் கொள்கிறேன்.  என்னோடு உரையாடிய ஆ. செல்லபெருமாள், மானிடவியல் அறிஞர்; பகத் வீர அருண், மானிடவியல் முனைவர் பட்ட ஆய்வாளர்; பிலவேந்திரன், நாட்டார் வழக்காற்றியல் அறிஞர்; புஷ்ப நந்தினி, நாடகத்துறை ஆய்வாளர்; ஏர் மகாராசன், ஆசிரியர்.)

மாடும்மாதொருபாகனும்! பெருமாள்முருகனின்மாதொருபாகனுக்குஎன்னநடந்ததோஅதுதான்இன்றைக்குஜல்லிக்கட்டிற்கும்நடக்கிறது. பல்லைக்கடித்துக்கொண்டு, இரண்டையும்ஆதரிப்பதுதவிரஎனக்குவேறுவாய்ப்புகள்இருக்கவில்லை. ஆனால்இதில்வேடிக்கைஎன்னவென்றால், மாதொருபாகனுக்குஎதிர்ப்புதெரிவித்தவர்கள்தான்இன்றைக்குஜல்லிக்கட்டிற்குஆதரவுதெரிவிக்கிறார்கள்.
இதுதான்முக நூல் பதிவு.  இனி வருவது அது சார்ந்த உரையாடல்:


. செல்லபெருமாள்: 
மாதொருபாகனில்வெளிப்பட்டதுசுயநலநுண்அரசியல். ஜல்லிக்கட்டில்