Wednesday, 23 December 2015

சாருவின் பொங்குமாங்கடல்

'சாரு, தன்ன முட்டாள்ங்கறாரே/"

'முட்டாள்னு அறிவிக்கிறார் அவ்வளவு தானே?!'

'என்ன இருந்தாலும், அவர் எழுப்புற தனி மனிதப் பிரச்சினை நியாயமால்லா இருக்கு?  இளையராஜா மாதிரி பிம்பங்களுக்காக தனிமனுஷ வாழ்வாதார உரிமையை பலி கொடுக்க முடியுமா?'

'இன்னும் எமோசனலா நீங்க பேசனும்.  சாருவப் பாருங்க 'நமக்கெல்லாம் தோல் தடித்து விட்டதா?'  எப்படி கேக்குறாரு?  அந்த மாதிரி கோவமா கேளுங்க.  'எளியவர்களுக்கு இந்த உலகில் வாழும் உரிமை இல்லையா?' 'இந்த தேசத்தில் கடவுள், புனிதர், மகான், அறிவுஜீவி மட்டும் தான் வாழ முடியுமா? இப்படி எமோசனோட கேளுங்க'.'

'அதே தான்.  இது அப்பட்டமான தனி மனித உரிமை மீறல்ங்கறேன்!  அந்த ஆள் இனி எந்த மொகத்தோடு இந்த சமூகத்தில் தொடர்ந்து இயங்குவார்?  அவர் வீட்டுக்கு பேப்பர் போடும் பையன் அவரைப் பார்த்து சிரிக்க மாட்டானா?  பஸ்ஸில அவருக்குப் பக்கத்தில யாரும் உக்கார வந்து, 'சீ, இவனா?' ன்னு விலகிப் போக மாட்டாங்களா?  அவரால இனி கௌரவமா வாழத் தான் முடியுமா?'

'இந்தத் தமிழ் சினிமாலெல்லாம் காட்டுவாங்களே, லஞ்சம் வாங்கிட்டு இல்ல வேறெந்த அசிங்கத்தையோ செஞ்சுட்டு, போலிஸ் வந்து இழுத்துப் போகிற அப்புராணி மிடில்கிளாஸை ஊரே எட்ட நின்னு சிரிக்குமே அது மாதிரியான சீனா?'

'ஏறக்குறைய அப்டித்தான்னு வச்சுக்கங்களேன், அவுரு பாவம் இல்லியா?'

'அப்டின்னா அவுரு பாவம் தான்!'

'பாத்தீங்களா, இது சரியான பேச்சி.'

'அவரென்ன கொலக்குத்தமா செஞ்சுட்டாரு?'

'அதான?'

'இந்தச் சின்ன தப்புக்கு இவ்வளவு பெரிய தண்டனையா?'

'அட, அவுரு செஞ்சது தப்பே இல்லங்க.  அது அவரோட தொழில்.'

'பாருங்க, அவரு செஞ்சது தப்பு கூட இல்ல.  அவரு, அவரு தொழிலத்தான் செஞ்சுருக்காரு.'

'ஏறக்கொறய சாகசம் பண்ணிருக்காரு'

''இளையராசாவையே கவுத்தவனாக்கும்!'

'பின்ன, யாருக்கு அந்தத் தைரியம் வரும்?  கம்பனிக்குள்ள மரியாதல்லா?'

'பெறவு, யாரு அவரப் பாத்து சிரிக்கிறது?'

'இல்ல, சாரு அப்டி எழுதியிருக்காருல்லா.'

'ஒரு வேள சாரு தான் அப்படி சிரிக்கிறாரோ என்னமோ?'

'சாருவா?'

'ம்.  பையன் ஏதோ தப்பு பண்ணிட்டான்.  அவன் தான் வெவரம் தெரியாதவன்,  நீங்க மகான், பெரியவரு, தன்மையா பேசி புத்திமதி சொல்லாண்டாமா?  இப்படியா நாலு பேரு மத்தியில வச்சி செய்றதுனு தான சாரு சொல்றாரு?'

'இல்லீங்க, சாரு அப்டில்லாம் சொல்லல.  அந்தப் பையன் தப்பே பண்ணல, இளையராசாவும் பெரிய மனுசன்லாம் இல்லன்னு தான சாரு ஃபீல் பண்றாரு?'

'பின்ன எதுக்கு அந்த மீடியாக்காரரோட வாழ்வுரிமை பாதிக்கப்பட்டதுங்கறாரு?'

'அந்த மீடியாக்காரரு, ஒரு எளிய மனுஷங்க,  அவருக்காக கொரல் குடுக்க வேண்டாமா?'

'மீடியாக்காரரா, எளிய மனுசனா?'

'ரெண்டும் தான்னு வச்சுக்கங்களேன்.'

'அன்னைக்கி, அந்த எடத்துல, அந்த கேள்விய கேட்டது சாதாரண மனுசன்லாம் இல்லங்க.  அது மீடியாக்காரர் கேட்ட கேள்வி.'
'அதெப்படி?'

அந்த ஃபீப் சாங் பத்தி இளையராஜா என்ன நினைப்பாருன்னு சாதாரண மனுசனுக்கு நல்லாவே தெரியும்.  மீடியாக்காரங்களுக்கு தான் தெரியாது?'
'இதென்ன புதுக்கரடி.  சாதாரண ஜனங்களுக்கு தெரிஞ்சது மீடியாக்கு தெரியாதா?'

'சாரு, எந்த விஷயத்துக்க்கு எப்டி ரியாக்ட் பண்ணுவாருன்னு கூட சாதாரண ஜனங்களுக்கு தெரியும்.  ஆனா மீடியாக்கு தெரியாது.'

'புது மாதிரி டிசைனா இது?'

'அன்னிக்கி பிரச்சன, பிரபலத்துக்கும் மீடியாக்குமான சண்ட பாத்துக்கங்க'.

'*&%$**#@'

'எல்லா மீடியாவும் தன்னத்தானே கிங் மேக்கர்னு நம்ப ஆரம்பிச்சு ஒரு மாமாங்கமாகுது.  தான் சொல்றதத் தான் ஜனங்க கேக்குராங்கனு அதுக்கு ஒரு மெதப்பு.'

'இந்த மொதல்வன் அர்ஜூன் மாதிரியா?'

'அப்படித்தான்னு வச்சுக்கங்களேன்.  எல்லா பிரபலங்களும் அயோக்கியர்கள்னு அது கிட்ட ஒரு தியரி இருக்கு.  அவங்களோட மொகமூடிய கழட்டுறது தான் தன்னோட வேலன்னு அது சீரியசா நம்புது.'
'இதுவும் அந்த சினிமா சீனு தான?'

'அதே தான்.  பிம்பங்கள ஒடைக்கிறதுனு ஒரு சங்கல்பம்.  அந்த வகையில் எல்லா மீடியாக்குள்ளயும் ஒரு சாரு ஒளிஞ்சுட்டு இருக்கார்.'

'ஒடைக்கறதுக்கா?'

'ஹாங்'

No comments: