Skip to main content

Posts

Showing posts from 2016

யானை காடாகிறது!

நான் ஏன் தலித்தும் அல்ல நூல் மதிப்புரைக்கான டீஸர்!!!! பவணந்தி, என்னோடு ஜேயென்யு வில் படித்தவர். 'நான் ஏன் தலித்தும் அல்ல' நூல் அறிமுகக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். நூலிற்கான மதிப்புரையை எழுதி முடித்து விட்டார் என்பதைக் கேட்க மகிழ்ச்சியாகவும், பரபரப்பாகவும் இருக்கிறது. தமிழில் நான் பொருட்படுத்தக் கூடிய ஒரு சில நபர்களில் பவணந்தி முக்கியமானவர். அவரது மதிப்புரைக்கான டீசர் இது! மதிப்புரையை வாசிக்கக் காத்திருக்கிறேன். பவணந்தி ஒருவழியாக நண்பர் தருமராஜின் நான் ஏன் தலித்துமல்ல நூலுக்கான எனது மதிப்புரையை எழுதி முடித்துவிட்டேன். நீண்ட நாட்களாக முழுமையுறாமலே இருந்து வந்த ஒன்று; மிகச் சுருக்க மாக இங்கே:   உங்களுக்கு எப்படியோ? தெரியாது!  ஆனால் எனக்கு இது யானையைப் பற்றிய ஒரு நூல்; இன்னும் சொல்லப் போனால் இது ஒரு யானையைப் பற்றிய நூல்; சில நேரங்களில் இது யானைகளைப் பற்றிய நூலாகவும் இருக்கக் கூடுமென்ற மயக்கம் ஏற்படுகிறது.  அநேகமாக வாசிப்பின் மயக்கமாக இருக்கலாம். ஒன்று மட்டும் நிச்சயம்; எங்கு பார்த்தாலும் சிங்கத்தைப் பற்றியே பேச்சாய் கிடக்கும் மதுரையில் யானையைப

சினிமா சிந்திக்கிறது - தொடரும் கபாலி உரையாடல்

(கபாலி திரைப்படம் பற்றி எழுதியிருந்த மூன்று கட்டுரைகள் தொடர்பாக எழுத்தாளர் மருதனோடு நடைபெற்ற முகநூல் உரையாடல்) மருதன்: டி. தருமராஜின்   கபாலி கட்டுரையை இன்றுதான் வாசித்தேன் . உண்மையில் கபாலியை ஒரு சாக்காக வைத்து கனமான ஒரு நீண்ட உரையாடலை அவர் நிகழ்த்தியிருக்கிறார் . திரைப்படத்தின் கதை , திரைப்படத்துக்கு வெளியில் பின்னப்படும் கதை என்று இரண்டாகப் பிரித்து அவர் கபாலியை ஆராய்வதைப் போல் கபாலி பற்றிய தருமராஜின் பார்வை , கபாலிக்கு வெளியில் நீளும் அவருடைய பார்வை என்று இரண்டாக இந்தக் கட்டுரையைப் பிரித்து ஆராய்ந்து , ரசிக்கலாம் . மூன்று பாகங்களில் நீளும் கட்டுரைகளின் தலைப்புகளை அவர் பின்வருமாறும் வைத்திருக்கலாம் . நான் ஏன் ரஜினி அல்ல ? நான் ஏன் ரஞ்சித் அல்ல ? நான் ஏன் நானே அல்ல ?  டி. தருமராஜ்: எனக்குப் போலவே இல்லாததெல்லாம் உங்கள் கண்களுக்கும்   தென்பட ஆரம்பித்திருக்கிறது, மருதன் !  இது ஒரு ஸோம்பி விளைவு . அந்தக் கட்டுரைகள் சில முக்கியமான விஷயங்களைப் பேசுவதை நீங்கள் கவனித்திருக்கலாம் .