Skip to main content

யானை காடாகிறது!

நான் ஏன் தலித்தும் அல்ல நூல் மதிப்புரைக்கான டீஸர்!!!!
பவணந்தி, என்னோடு ஜேயென்யு வில் படித்தவர். 'நான் ஏன் தலித்தும் அல்ல' நூல் அறிமுகக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். நூலிற்கான மதிப்புரையை எழுதி முடித்து விட்டார் என்பதைக் கேட்க மகிழ்ச்சியாகவும், பரபரப்பாகவும் இருக்கிறது.
தமிழில் நான் பொருட்படுத்தக் கூடிய ஒரு சில நபர்களில் பவணந்தி முக்கியமானவர். அவரது மதிப்புரைக்கான டீசர் இது!
மதிப்புரையை வாசிக்கக் காத்திருக்கிறேன்.



பவணந்தி

ஒருவழியாக நண்பர் தருமராஜின் நான் ஏன் தலித்துமல்ல நூலுக்கான எனது மதிப்புரையை எழுதி முடித்துவிட்டேன்.

நீண்ட நாட்களாக முழுமையுறாமலே இருந்து வந்த ஒன்று; மிகச் சுருக்கமாக இங்கே: 

உங்களுக்கு எப்படியோ? தெரியாது! 

ஆனால் எனக்கு இது யானையைப் பற்றிய ஒரு நூல்; இன்னும் சொல்லப் போனால் இது ஒரு யானையைப் பற்றிய நூல்; சில நேரங்களில் இது யானைகளைப் பற்றிய நூலாகவும் இருக்கக் கூடுமென்ற மயக்கம் ஏற்படுகிறது. 

அநேகமாக வாசிப்பின் மயக்கமாக இருக்கலாம். ஒன்று மட்டும் நிச்சயம்; எங்கு பார்த்தாலும் சிங்கத்தைப் பற்றியே பேச்சாய் கிடக்கும் மதுரையில் யானையைப் பற்றி பேசுவதென்பது பெரிய மாற்றம் தான்; 

காட்டுக்கு யானை ராஜாவாவது பற்றியதல்ல இந்நூல்; மாறாக யானை காடாகவே மாறிப்போவது. அதனால் தானோ என்னவோ நூலின் முகப்பிலேயே யானை காணாமல் போய்க்கொண்டிருப்பதாக சொல்லியாகிவிட்டது. 

இப்படி யானை காணாமல் போவது சிங்கத்திற்குக் கொண்டாட்டம் எனவும் சிலரால் எச்சரிக்கப்பட்டாகியும் விட்டது; 

இருந்தும் ஒன்றை மட்டும் இங்கு எதேட்ச்சையாய்ச் சொல்லிவிடத் தோன்றுகிறது; 

கண்டிப்பாகச் சிங்கத்திற்குத் தெரிந்தேதானிருக்கும் – 

யானை காடாகும் போது அக்காட்டின் அங்கமாயிருக்கும் தான் என்னவாவோம் என்று!!!

Comments

Popular posts from this blog

வேற்றுமெய்யும் வேற்றுமையும்

பால்ய கரகாட்டக்காரி கௌசல்யாவின் கதை

‘நாட்டார் கலைஞர்கள் எவ்வாறு உருவாகுகிறார்கள்?’ என்று தேடிக் கொண்டிருந்த போது தற்செயலாகத்தான் கௌசல்யாவை சந்தித்தேன். ‘நானும் கலைஞர் தான், சார்’ என்று வந்து நின்ற சிறுமிக்கு பதிமூன்று, பதினான்கு வயது இருக்கலாம். ‘நீயா?’ ‘ஆமா, சார்’, சங்கோஜத்தோடு சொன்னாள். நான் சந்தேகப்படுகிறேன் என்று தெரிந்ததும், பக்கத்தில் நின்றிருந்த மாரியம்மாளை ‘நீ சொல்லும்மா, அப்ப தான் நம்புவாங்க’ என்பது போல பார்த்தாள். அதற்கு மாரியம்மா, ’ரெண்டு வருசமா இவ ஆடி தான் சார் சாப்புடுறோம்’ என்றார்.  சிறுமி கெளசல்யா, ஒரு கரகாட்டக் கலைஞராம்!   அந்தத் தற்செயல் இப்படித்தான் நடந்தது.  ஒரு பால்ய கரகாட்டக்காரியை நான் முதல் முறையாகச் சந்திக்கிறேன். ************ நான் பார்க்க வந்தது மாரியம்மாளை.  அவர் ஒரு மேனாள் கரகாட்டக்கலைஞர்.  வயது ஐம்பதுக்குள் இருக்கலாம்.  கரகாட்டக்கலைஞர்கள் சீக்கிரமே ஓய்வு பெற்றுவிடுகிறார்கள். பெண் கலைஞர்கள் என்றால் இன்னும் வேகமாக, முப்பத்தைந்தை தாண்ட மாட்டார்கள்.   'ஓய்வு' என்பது கூட தவறான வார்த்தை தான்.     நாட்டார் கலைஞர்களுக்கு 'ஓய்வ...

அன்புள்ள ஜெயமோகன்

அன்புள்ள தர்மராஜ் அந்த ' நாலைந்துபேரில் ' நானும் ஒருவன் என அறிந்திருப்பீர்கள். ஆனால் அதில் எனக்குச் சொல்ல ஏதுமில்லை. எழுத்தாளனாகத் தெரிந்துகொள்வதோடு சரி. எங்காவது புனைவில் அவை என்னை பாதித்து வெளிப்பாடு கொள்ள்லாம்.   இப்போது தளம் சிறப்பாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்.   அப்புறம் என் எழுத்து பற்றி. என்னுடையது கோணங்கியின் ' ஆட்டமாட்டிக் ' எழுத்து இல்லை. அது மொழிவழியாக வெளிப்படும் உள்ளம் , உணர்ச்சி மட்டுமே. கற்பனாவாதத்தின் ஒரு தளத்தில் அதற்கு இடமுண்டு. அது எழுத்தின் ஒரு சிறிய பகுதி என்று நான் அறிவேன் அதுவும் ஒரு மனஎழுச்சியின் கனத்தில் மட்டுமே அது சாத்தியம் என்றும் அதை ஒரு ' கிராஃப்ட் ' ஆக மாற்றமுடியாது என்றும் அறிவேன்.   மேலும் வெண்முரசின் எல்லா நாவல்களும் ஒரே தளத்தை , மொழியை சார்தவை அல்ல. மிக திட்டவட்டமான அரசியலும் , தத்துவமும் , உணர்ச்சிகளும் நாடகத்தருணங்களும் மட்டுமல்ல குழந்தைக்கதைகளும் சாகசக்கதைகளும் கொண்டது அது. இப்போது பிரயாகை மிக நேரடியான நடை கொன்டது இந்தியச் சமூகத்தின் சமூகவியல் -அழகியல் உள்ளடக்கம் பற்றிய என் பார்வை அதில் உ...