Skip to main content

Posts

Showing posts from February, 2016

அயோத்திதாசர் ஆகி வந்த கதை

அயோத்திதாசரின் பெளத்தத்தை முழுமையாக விளங்கிக் கொள்வதற்கு இரண்டு நிகழ்வுகளைத் தெரிந்திருத்தல் அவசியம் - ஒன்று, அயோத்திதாசர் வரலாற்றில் செயல்பட ஆரம்பித்த தருணம்; இரண்டாவது, அயோத்திதாசர் ஆகி வந்த பின்புலம். இதில் இரண்டாவதான, அயோத்திதாசர் ஆகி வந்த கதையை முதலில் பார்க்கலாம்.  சும்மா ஒரு மாற்றத்திற்காகத் தான்.  எல்லாவற்றையும்  முதலிலிருந்தே தொடங்க வேண்டுமா என்ன? அயோத்திதாசர் கொஞ்சம் பழைய காலத்து மனிதர்.  பழைய காலத்தின் கடைசி மனிதர் என்று கூட சொல்லலாம்.  கதை போலச் சொல்லி நாம் கேட்டிருந்த திண்ணைப் பள்ளிக்கூடத்தில் தான் அவர் கல்வி கற்றிருக்கிறார்.   அதாவது தமிழ். தமிழ் என்றதும் இலக்கியத்தை மட்டுமல்ல, வாழ்க்கையையும் சேர்த்தே கற்றுத் தந்திருக்கிறார்கள்.  மொழி வழி விரியும் வாழ்க்கையை.  தமிழ் எழுத்துக்களுக்குப் பின்னால் இலக்கணம் மட்டுமல்ல, ஒரு கச்சிதமான கருத்தியலே இருப்பதாக அக்காலங்களில் நம்பியிருக்கிறார்கள்.  பின்னாட்களில், அமுத எழுத்து - நச்சு எழுத்து என்று அயோத்திதாசர் பேசுவது அனைத்தும் அத்திண்ணைப் பள்ளிக்கூடத்தில் கற்றது தான்.   இது ஒரு வேடிக்கையான மொழியியல்.   ‘சொற்கள் உருவாக

எதிர் வினை - ஆவுடையாள் கேட்ட பிச்சை

தர்மு, உங்களுடைய ‘ஆவுடையாள் கேட்ட பிச்சை’ யைப் படித்து விட்டு இதை எழுதுகிறேன்.  நான் வாசித்தது சரி என்றால், இந்திய ஞான மரபில் அமானுஷ்யம் பற்றி நடந்த உரையாடலைக் கவனப்படுத்துகிறீர்கள் என்று நினைக்கிறேன்.  ஆங்கிலத்தில் மிஸ்டிசிசம் என்று மேம்போக்காக இதைப் புரிந்து கொள்கிறார்கள். கலைகளின் ஆதார சுருதியே இந்த அமானுஷ்யம்.  கலையை புத்திபூர்வமாக அணுக முற்பட்ட மாடர்னிஸத்தை வீழ்த்துவதற்கு இந்த அமானுஷ்யத்தையே லத்தின் அமெரிக்க எழுத்துகள் பயன்படுத்திக் கொண்டன.  பகுத்தறிவுவாதத்திற்கும் கலைக்கும் என்றைக்குமே ஒத்து வந்திருக்கவில்லை என்பதை பெளத்தம் முதல் திராவிட இயக்கம் வரைக்கும் நம்மால் பார்க்க முடியும்.  கலை மனம் பகுத்தறியும் மனதை குறைத்தே மதிப்பிட்டிருக்கிறது.  உலகை தட்டையாகப் புரிந்து கொள்வதாகக் கலை, அறிவியலை கண்டித்தே வந்திருக்கிறது. இதையெல்லாம் நீங்களே அறிவீர்கள்.  ஆனால், உங்களது ஆவுடையாள் கேட்ட பிச்சை, ஒரே நேரத்தில் அமானுஷ்யத்தையும் பகுத்தறிவையும் சமமாகப் பாவித்துப் பேசுவதாக நினைக்கிறேன்.  அமானுஷ்யத்தை நீங்கள் மறுத்தத்து போல் தெரியவில்லை.  ஆனால், ஏற்கனவே சொல்லியிருப்பது அமானுஷ்யம் இல்லை என்கிற

ஆவுடையாள் கேட்ட பிச்சை

நீண்ட இடைவெளிக்குப் பின், அம்மாவின் கனவுகளில் மரகதப் பச்சை நிற பாம்புகள் வரத் தொடங்கின.   அம்மா எப்பொழுதுமே ப்ராய்டை நம்பியதில்லை.   இந்த விஷயத்தில் யுங் பரவாயில்லை என்பார்.  அதனால்,  சங்கரன்கோவிலுக்குப் போனோம்.   அம்மாவுக்கு நாகசுனையை எட்டிப்பார்த்தால் போதும் என்று இருந்தது.   அப்படியே வருகிற வழியில் ஆவுடையாள் காதிலும் விஷயத்தைப் போட்டு வரலாம்.  தரிசனமெல்லாம் முடிந்து, புத்து மண்ணையும் எடுத்துக் கொண்டு வாசலுக்கு வந்தோம். நடையைத் தான் தாண்டியிருப்பேன்.  இல்லை.  தாண்டக்கூட இல்லை.  தாண்டுவதற்காக காலைத் தான் தூக்கியிருப்பேன் … என் காதில், ரகசியம் பேசுகிற மாதிரி ஒரு குரல் … ‘தருமராஜா … ஏதாவது குடுத்துட்டுப் போய்யா.’ யாரோ பொடதில அடிச்சா மாதிரி இருந்தது .   திரும்பினால் , வயசான ஒரு அம்மா .  நடையில் கையேந்தி நிற்கிறது.   ‘ ஏதாச்சும் குடுத்துட்டு போய்யா.’   என் பெயரைச் சொல்லிக் கேட்டதா?   உடனே திரும்பி கோவிலுக்குள் பார்க்கிறேன்.  அடுக்கடுக்காய் இருள்.  அங்கே என் பதட்டம் சிறு துளி ஒளியாக நடுங்கிக் கொண்டிருக்கிறது. அகப்பட்ட பத்து ரூபாயைக் கைய