Skip to main content

Posts

Showing posts from January, 2018

Schizo's Stroll

இன்று காலையில் நான் யோசித்திருக்கக்கூடாது. பேசாமல் சென்னைப் புத்தகத் திருவிழாவிற்குப் போயிருக்கவேண்டும். வழக்கமாய் காலைகளில் நான் யோசிப்பது இல்லை. அந்நேரம் தான் எல்லோரும் யோசிக்கிறார்கள் என்பதால், ட்ராபிக் அதிகமாகவே இருக்கும். ஆளுக்கு ஆள் குறுக்க மறுக்க போய்க் கொண்டிருப்பார்கள். அதனால் எப்பொழுதும் தவிர்த்து விடுவேன். ஆனால், இன்றைக்கு என்னவோ இப்படி ஆகி விட்டது. முதலில் இந்த வரி மட்டும் தான் தோன்றியது - ‘சாதி, ஒரு பேச்சு!’ என்னடா இது வம்பு என்று பார்த்துக் கொண்டிருக்கும் போதே அதன் அடுத்த வரி வந்து விழுந்தது - ‘சாதி எதிர்ப்பு, ஒரு இரைச்சல்!’ கூடவே மூன்றாவது வரியும் - ‘பிராமணியமோ காட்டுத்தனமான மெளனம்.’ மூன்றையும் சேர்த்துப் பார்க்கும் பொழுது பயம் வந்தது. ‘சாதி ஒரு பேச்சு; சாதி எதிர்ப்பு இரைச்சல்; பிராமணியம் மெளனம்.’ உடனே, ’இந்த நூற்றாண்டின் எதிர்ப்பு அரசியல், இரைச்சலுக்கு அர்த்தம் கண்டுபிடிப்பது தானா?’ என்றேன் நான். நான் கேட்டதைக் கண்டு கொள்ளாமல், ‘பிராமணியத்தின் மெளனமும், பேச்சிற்கிடையிலான மெளனம் இல்லை; அது இப்பொழுது எழுத்தில் உருவாகும் மெளனம்!’ என்றேன் நான். ‘அப்படிய

அப்பாவைக் கொன்று தின்ற கனி - ஜெயமோகனின் சிறுகதை

ஆனந்த விகடனில் ஜெயமோகன் ஒரு கதை எழுதியிருக்கிறார். ஒரு அப்பாவை, ஒரு அம்மா கைதவறிக் கொன்று விடுகிறாள்.  குற்றவுணர்வு அவளைக் கொல்கிறது.  ஆனால், கொஞ்ச காலம் தான்.  சீக்கிரமே அந்தக் குற்றவுணர்விலிருந்து விடுபட்டும் விடுகிறாள்.  வேறொரு தேசம், வேறொரு வாழ்க்கை என்று முழுவதுமாக மாறிப்போகிறாள்.    அம்மாவின் விரைந்த விடுபடுதலை மகனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.  குழம்புகிறான்.   ஏறக்குறைய மனச்சிதைவுக்கு ஆளாகிறான்.   இந்த நேரம், ஒரு அமெச்சூர் உளவியலாளர் மகனுக்கு உதவ முன்வருகிறார்.   ஆனால், அவரது ஆலோசனை விபரீதமாக இருக்கிறது.   ‘அப்பாவை நீயே கொன்றதாக நம்பி, சடங்குகளைச் செய்.  குற்றவுணர்விலிருந்து விடுபடுவாய் !’ 1. அப்பா - அம்மா - மகன் என்றொரு ஃப்ராய்டியக் குடும்பம்.  அப்பாவைக் கொன்ற குற்றவுணர்ச்சி தான் கதையின் சிக்கல்.   2. அந்த அமெச்சூர் உளவியலாளரின் பெயர் மார்த்தா.   நமது மகனின் முதல் மனைவி. விவாகரத்தாகி இருவரும் வேறு வேறு திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.   அவளது இரண்டாவது கணவன், நமக்குத் தெரிய, தச்சு வேலை செய்கிறான்.  மேரி - ஜோசப் - ஜீசஸ்.  இதுவும் ஒரு ஃப்ராய்டியக் குடும்பம் தான்.