Skip to main content

கீழடிக்கு பிரதமர் வருகிறார் என்று தகவல் வந்தால்….

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கீழடிக்கு வருகிறார் என்றொரு செய்தி வந்தால் ஆச்சரியப்படுவீர்க்ளா?  நான் படமாட்டேன்.  அவர் ஒருவிளம்பரப்பிரியர் என்பதாலாஅது மட்டுமல்லகீழடியும் சுற்றுலாத்தலமாக மாற்றப்பட்டிருக்கிறது என்பதாலும்.  


ஒரு வலதுசாரி பிரதமருக்குவெகுஜன பிம்பத்தை பூதாகரமாய் பெருக்குவதற்கு நல்ல புகைப்படங்களும்அப்புகைப்படங்களுக்குகவர்ச்சிகரமான நிலக்காட்சிகளும் தேவைப்படுகின்றன என்பதை என்னால் விளங்கிக் கொள்ள முடிகிறது.  எனது கேள்வியெல்லாம்நாம் ஏன்கீழடியை உடனடியாக சுற்றுலாத்தளமாக மாற்ற விரும்புகிறோம்.

வரலாற்றின் அசைவியக்கம் பற்றி பேசுகிற ஃப்ரெஞ்ச் வரலாற்றறிஞர் பியர் நோரா திரும்பத் திரும்ப ஒரு விஷயத்தைக் குறிப்பிடுகிறார் - நினைவிடங்கள்.  Les Leux de Memoire என்று ஃப்ரெஞ்சில் எழுதுவதை நான் இப்படி மொழிபெயர்த்துக் கொள்கிறேன்.  

நினைவிடங்களை நிர்மாணிப்பதே வரலாற்றின் அடிப்படையான நோக்கம்.  அது ஒரு சமூகத்தின்பண்பாட்டின் ஞாபகங்களை கண்ணுக்குத்தெரியும் வகையில் ஓரிடத்தில் குவித்து வைக்கத் தொடங்குகிறது.  அது புத்தகமாக இருக்கலாம்கல்வெட்டுகளாக இருக்கலாம்கற்படுகைகள்சமாதிகள்கோட்டை கொத்தளங்கள்என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.  கீழடியை நாம் ஏறக்குறைய அப்படியொருநினைவிடமாக மாற்றத் தொடங்கியிருக்கிறோம்.  

நினைவிடமாக மாற்றப்படுவதற்கான அத்தனை லட்சணங்களும் கீழடிக்கு உண்டுஆனால்முதலில் அது என்னனென்ன ஞாபகங்களைக்கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் விசாரிக்க வேண்டும்.   அதற்கு முன்பே அதை நினைவிடமாக மாற்றும் கந்தரகோலத்தை ஏன் செய்கிறோம்என்பது தான் கேள்வி.

இது ஒரு எளிய கேள்வி என்றாலும்இதற்கு சொல்லப்படும் பதில் சிடுக்குகள் நிறைந்த, ‘குற்றச்சாட்டுகளின் நீண்ட பட்டியல்’.  தமிழ்க்கலாச்சார மேன்மைகளை இந்திய இறையாண்மை அங்கீகரிப்பது இல்லைஆரியர்களின் மேலாண்மைக்காக திராவிடச் சுவடுகள் திட்டமிட்டுமறைக்கப்படுகின்றனமத்தியத் தொல்லியல் துறை காழ்ப்புணர்ச்சிகளுடன் செயல்படுகிறதுதமிழ் மரபுகளை ஆய்வு செய்வதற்கான நிதிஆதாரங்கள் வழங்கப்படுவது இல்லைஇந்துத்துவத்திற்கு மாற்றான பண்பாட்டுச் செயல்பாடுகளை நசுக்கும் வலதுசாரித்தனம்பிராமணர்களின்நலனைக் காப்பதற்கான ‘ஒற்றைப் பண்பாடு’ என்ற கொள்கையின் எதேச்சதிகாரம்தமிழர்கள் இறையாண்மைக்கு எதிராகத் திரும்பிவிடுவார்கள் என்ற இந்திய பயம்.  

இவை குற்றச்சாட்டுகள் மட்டும் அல்லதமிழக வெகுஜன அரசியலை தீர்மானிக்கும் காரணிகளும் கூட.  எனவேஇதில் அறிவியல்பூர்வமானதர்க்க நியாயங்களைத் தேடிக் கொண்டிருக்க வேண்டியது இல்லை.  இப்பட்டியலை வாசிப்பவர்களும் சரிஅதற்கு எதிர்பாட்டுப்பாடுகிறவர்களும் சரி உணர்ச்சிகளாலும் லாப நோக்கங்களாலும் உந்தப்பட்டவர்கள்.  சிலருக்கு வணிகக் காரணங்கள்சிலருக்கு அதிகாரக்காரணங்கள்.  இவை அனைத்தும் சங்கமிக்கும் மையப்புள்ளிஇந்திய இறையாண்மையின் சர்வாதிகாரத்தன்மை.  இன்றைய யதார்த்தமானவலதுசாரி சிந்தனை மட்டுமல்லநேற்றைய சோசலிச இந்திய இறையாண்மையும் கூட ‘தமிழ்’ குறித்து இதே சர்வாதிகாரத்தோடே செயல்பட்டுவந்தது என்பது ஒட்டுமொத்த குற்றச்சாட்டும்.

சுதந்திரமடைந்த காலத்திலிருந்து இது தான் தமிழக அரசியலை இயக்கிக் கொண்டிருக்கிறது.  ஆனால்வேறு வேறு வடிவங்களில்.  திராவிடஇயக்கங்கள்மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கொண்டிருக்கும் பிராமண எதிர்ப்புசுயமரியாதைநாத்திகம்திராவிட அடையாளம் என்றஅத்தனை வெகுஜன பேச்சுகளுக்கும் பின்னால் இந்திய இறையாண்மை மீதான அவநம்பிக்கையே மறைந்திருக்கிறது.  

ஆனால்துரதிர்ஷ்டவசமாகஇறையாண்மைக்கு எதிரான எந்தவொரு அசைவும் ‘பிரிவினைவாதம்’ என்று முத்திரை குத்தப்பட்டதால்திராவிடஇயக்கங்களின் அரசியல் உரையாடல்கள் வலுக்கட்டாயமாய் பண்பாட்டு அரசியல் உரையாடல்களாக மடைமாற்றம் செய்யப்பட்டன.  அரசியலுக்கும் பண்பாட்டு அரசியலுக்கும் என்ன வேறுபாடு என்ற விவாதத்திற்குள் சென்றால் அதுவொரு கேலிகூத்து என்று விளங்கி விடும்.  அதனால்அது உருவாக்கிய எதிர் விளைவுகளைக் கவனப்படுத்துவோம்.

பண்பாட்டு அரசியல்அரசியலை பாதித்ததை விடவும் ஆய்வுகளில் தான் அதிக சேதாரங்களை ஏற்படுத்தியது.  ஒரு உதாரணத்திற்குதமிழிலக்கியச் சூழலை எடுத்துக் கொள்ளுங்கள்.  யார் இலக்கியலாளர்யார் அரசியலாளர் என்ற குழப்பம் தோன்றுகிறதா?  நமக்கு எல்லாஅறிஞர்களும் அரசியல்வாதிகளாக இருந்தார்கள்தலைகீழாகவும் இருந்தார்கள்.  வெகுஜன அரசியலுக்கு இதை விட உத்தமமானக் காரியம்இருக்க முடியாது.  ஆனால்அறிவியல் சூழலுக்கு.  ஒரு துயரமானக் கருத்துக் கணிப்பின்படிதமிழகம் குறித்த எந்தவொரு பண்பாட்டு அறிவியல்ஆதாரத்திற்கும் நாம் மேற்கத்திய உலகையே நம்ப வேண்டிவந்தது.  ஏனெனில்நம்மிடம் இருப்பது அனைத்தும் விதந்தோதுவதும்ஊதிப்பெருக்குவதுமே.  தமிழில் பண்பாட்டு ஆய்வுகள் வளராமல் போனதற்கு இதுவே ஆகப்பெரிய காரணம்.

சங்க இலக்கியம் என்ற மாபெரும் வரலாற்றுத் தரவிலிருந்து நாம் அறிவியல்பூர்வமாய் பெற்றுக் கொண்ட விஷயங்கள் என்ன என்பதை கொஞ்சம்யோசித்துப் பாருங்கள்.  இன்றைக்கு சங்க இலக்கியம் ஒரு ‘நினைவிடமாகப்’ போற்றப்படுகிறது என்றால்அதன் நினைவுகளைவடிவமைத்தவர்கள் யார் என்று கேட்டுப் பாருங்கள்.  திராவிட அரசியல்வாதிகள்!  அதனால் தான் அந்த வரலாற்றுத்தரவு பெருமிதங்களைமட்டுமே வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது.
இதுஏதோ ஒரு முறை நடந்த சீர்கேடு மட்டுமல்ல.  இதுதமிழர்களின் அடிப்படையானக் கோளாறு.  அதனால் தான் இன்றைக்குக் கீழடியிலும்அது தொடர்கிறது.

கீழடி தரக்கூடிய தொல்லியல் சான்றுகளை உள்வாங்கிக் கொள்வதற்கு வெகுஜன பண்பாட்டு அரசியல் மட்டும் போதாது.  அதே போலதொல்லியல் மாதிரியான இயந்திரத்தனமான அறிவியலாலும் கூட அதனை முழுமையாக விளக்கி விட முடியாது.  கீழடிஆதிச்ச நல்லூர்மாதிரியான சான்றுகள் ஏற்கனவே சொல்லப்பட்டவைகளை மீறக்கூடிய மனப்பான்மையையே அறிவியலில் வேண்டுகின்றன.  Decolonisation என்று ஆங்கிலத்தில் சுருக்கமாகச் சொல்லிவிடுகிறார்கள்.  திராவிட - ஆரிய முரண் என்ற கற்பனை அவற்றுள் ஒன்று.  தமிழி என்பதுஇன்னொன்று.  இப்படிநிறுவப்பட்ட கருதுகோள்களிலிருந்து விடுபட்டு சிந்திக்கிற மனங்களே நமது இன்றைய தேவை.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.  கீழடியில் நமக்குக் கிடைப்பதுநகரம் அல்லநகரத்தின் இடிபாடுகள்.  அதாவதுஏதோவொருநூற்றாண்டில் வாழ்ந்துபின் பாழடைந்து போன நகரம்.  வாழ்ந்த நகரம் எவ்வாறு சுவடுகளை விட்டுச் செல்கிறதோ அதே போல பாழடைந்தநகரங்களும் சுவடுகளை விட்டுச் செல்கின்றன.  வாழ் சுவடுகளும்பாழ் சுவடுகளும் வேறு வேறான சமூகப் பின்புலங்களிலிருந்துஉருவாகுகின்றன என்பதை மறந்து விடக்கூடாது.  

ஒரு தொல்லியல் சான்றிலிருந்து நான் கற்பனை செய்யக்கூடிய ‘மக்கள்’ உயிரோட்டமுள்ள நகரத்தில் வாழ்ந்தவர்களா அல்லது பாழடைந்தநகரில் தஞ்சமடைந்த மக்களா என்பது உங்கள் ஆய்வின் திசையையே மாற்றியமைக்கக்கூடியது.  இரண்டு பேரும் வெவ்வேறு வர்க்கபின்னணியைக் கொண்டவர்கள் என்பதை உங்களால் உணர முடிகிறதா?  இப்பொழுதுகீழடியில் கிடைத்த பானையோட்டுக் கீறல்கள் எந்தமக்களுடைய சுவடுகள் என்று நீங்கள் தீர்மானிப்பீர்கள்?  அந்தப் பானையை புதிதாய் பயன்படுத்திபின் வீசி எறிந்த மக்களின் சுவடா அல்லதுவீசப்பட்ட குப்பையைப் பயன்படுத்தி வாழ்ந்த மக்களின் சுவடா?  

கீழடி மாதிரியான தொல்லியல் சான்றுகள் பாழ் சுவடுகள் என்பதை முதலில் உணர வேண்டும்.  இந்தப் பாழ்சுவடுகள் தரும் செய்திகள்நிச்சயமாய் நாம் கற்பனை செய்கிற நாகரீகம் பற்றிய நேரடியான செய்திகள் அல்ல.  ஒரு நகரத்தின் குப்பை மேட்டில் நிற்பது போலக் கற்பனைசெய்யுங்கள்.  அந்தக் குப்பைமேட்டைக் கொண்டு அதன் வாழ்க்கை முறையை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா என்பது தான் கீழடிஎழுப்பும் சவால்.  

இதைத் தொல்லியல் என்ற ஒற்றை அறிவியல் செய்து விடும் என்பது அதிகப்படியான நம்பிக்கை.  இதற்காகப் பல்வேறு அறிவியலாளர்களின்கூட்டமைப்பு ஒன்று தேவைப்படுகிறது.  அந்தக் கூட்டமைப்பு வெகுஜன அரசியலுக்கு அப்பாலிருக்க வேண்டும் என்பது மிக முக்கியம்.  அரசும்அரசின் இறையாண்மையும் இதை வெகுதூரத்திலிருந்து மட்டுமே கண்காணிக்க வேண்டும் என்பது மிக மிக முக்கியம்.  

கீழடி போன்ற தடயக் குவியல்கள் இதைத் தான் நம்மிடமிருந்து எதிர்பார்க்கின்றன.  இதை நம்மால் செய்ய முடியவில்லை என்றால்கிமு 6ம்நூற்றாண்டுக் கீழடியில் நாகரீக தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பது கூட நிரூபிக்கப்படலாம்ஆனால்அவர்களின் வழிவந்தவகளே நாம் என்பதுநிரூபணம் ஆகாது.

Comments

Popular posts from this blog

பால்ய கரகாட்டக்காரி கௌசல்யாவின் கதை

‘நாட்டார் கலைஞர்கள் எவ்வாறு உருவாகுகிறார்கள்?’ என்று தேடிக் கொண்டிருந்த போது தற்செயலாகத்தான் கௌசல்யாவை சந்தித்தேன். ‘நானும் கலைஞர் தான், சார்’ என்று வந்து நின்ற சிறுமிக்கு பதிமூன்று, பதினான்கு வயது இருக்கலாம். ‘நீயா?’ ‘ஆமா, சார்’, சங்கோஜத்தோடு சொன்னாள். நான் சந்தேகப்படுகிறேன் என்று தெரிந்ததும், பக்கத்தில் நின்றிருந்த மாரியம்மாளை ‘நீ சொல்லும்மா, அப்ப தான் நம்புவாங்க’ என்பது போல பார்த்தாள். அதற்கு மாரியம்மா, ’ரெண்டு வருசமா இவ ஆடி தான் சார் சாப்புடுறோம்’ என்றார்.  சிறுமி கெளசல்யா, ஒரு கரகாட்டக் கலைஞராம்!   அந்தத் தற்செயல் இப்படித்தான் நடந்தது.  ஒரு பால்ய கரகாட்டக்காரியை நான் முதல் முறையாகச் சந்திக்கிறேன். ************ நான் பார்க்க வந்தது மாரியம்மாளை.  அவர் ஒரு மேனாள் கரகாட்டக்கலைஞர்.  வயது ஐம்பதுக்குள் இருக்கலாம்.  கரகாட்டக்கலைஞர்கள் சீக்கிரமே ஓய்வு பெற்றுவிடுகிறார்கள். பெண் கலைஞர்கள் என்றால் இன்னும் வேகமாக, முப்பத்தைந்தை தாண்ட மாட்டார்கள்.   'ஓய்வு' என்பது கூட தவறான வார்த்தை தான்.     நாட்டார் கலைஞர்களுக்கு 'ஓய்வு' என்பதே கிடையாது.  கலைஞர்க

5 கலவரங்களும் கதையாடல்களும்

5   கலவரங்களும் கதையாடல்களும்  க . இராமபாண்டி   விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டத்தில் புதுப்பட்டி எனும் ஊர் உள்ளது . இவ்வூரில் 18 வகைச் சாதியினர் உள்ளனர் . இங்கு 1918ஆம் ஆண்டிலிருந்து 2000ம் ஆண்டு வரை பல்வேறு காரணங்களால் சாதிய மோதல்கள் நடைபெற்று வந்துள்ளன .   1918 - ஆம் ஆண்டு பறையர்களுக்கும் (அப்பொழுது 70 குடும்பங்கள்) பண்ணாடிகளுக்கும் (150 குடும்பங்கள்) சுடுகாட்டுப் (பறையர்கள் பயன்படுத்திய சுடுகாட்டை பண்ணாடிகள் பயன்படுத்தியதால்) பிரச்சினை ஏற்பட்டு பண்ணாடி சமூகத்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர் . காவல் துறையினர் பறையர்களில் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்கின்றனர் .   காவல் துறையினரின் தொந்தரவு தாங்கமுடியாமல் , பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருவில்லிப்புத்தூர் பங்குத் தந்தை பிரெஞ்சுச் சாமியார் மாஜி அருளப்பரைச் சந்தித்து ‘நாங்கள் கிறித்தவ மதத்திற்கு மாறுகிறோம் . எங்களை காப்பாற்றுங்கள் ’ என்று கூறுகின்றனர் . மாஜி அருளப்பர் காவல் நிலையத்திற்குச் சென்று , ‘பிரச்சினை என்பது இரு பிரிவினருக்கும் தான் . ஆதலால் , இரு பிரிவினர் மீதும் வழக்குப் பதிவு செய்யுங

வன்முறையை வன்முறையாலும் புனைவை புனைவாலும்... தேவேந்திரர் புராணம்!

தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி? (‘இந்திர தேச சரித்திரம்’ என்ற தொடர் கட்டுரையிலும், ‘பறையர் என்ற பெயரின் உற்பவம்’ என்ற கட்டுரையிலும் பிராமண எதிர்ப்பின் வரலாற்றை கோவில் உரிமைகள், பூஜை புனஸ்காரங்கள் சார்ந்து ஒரு புனைவு போல அயோத்திதாசர் சித்தரித்திருப்பார்.  இப்படியான வரலாறு குறித்து என்னிடம் சில கேள்விகள் இருந்தன:   ‘சாதித் துவேசம் என்பது பிராமணர்களின் சதி’ என்ற வாதம் எவ்வளவு தீர்க்கமான உண்மை? பறையர் சாதிக்கு சொல்லப்படுவது போல தமிழகத்தின் அத்தனை சாதிகளுக்கும் தனித்தனியே ‘பிராமண எதிர்ப்பு’ வரலாறு இருக்க முடியுமா?  அப்படி இருந்தன என்றால் அவை எங்கே? இல்லை என்றால் ஏன் இல்லை?  இதற்காக, வேளாண் சாதி என்று தங்களைப் பெருமையாக அடையாளப்படுத்திக் கொள்ளும் தேவேந்திரர்கள் ‘பிராமண சூழ்ச்சியால்’ இன்றைய இழிநிலையை அடைந்தார்கள் என்று தொனிக்கக்கூடிய புனைவரலாறு ஒன்றை ‘தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி?’ என்ற பெயரில் எழுதினேன்.  அதை அம்மக்கள் மத்தியில் பரவவும் செய்தேன். ஆதியில் அவர்கள் பெளத்தர்களாக இருந்தார்கள் என்றும், போலி பிராமணர்களின் சூழ்ச்சியால் இத்தாழ்நிலை அடைந்தார்கள் என்றும் என்னால் ஏறக