Skip to main content

தேவேந்திரத் தன்னிலை...


மாற்று வரலாற்றுவரைவியலில் கடந்தகால சம்பவங்களை அல்லது நிகழ்வுகளைக் கற்பனை செய்வதில் சில சிக்கல்கள் உள்ளனஉதாரணமாய், பூர்வ பெளத்தர்களைபறையர்கள்என்று சொல்லி இழிவுபடுத்தினார்கள் என்பதை நிரூபிக்க விரும்பும் அயோத்திதாசர், அதற்கொரு சம்பவத்தைக் கற்பனை செய்கிறார்அந்த சம்பவத்தில் வேஷ பிராமணர்களும், பூர்வ பெளத்தர்களும், பொதுமக்களும் கதாபாத்திரங்களாக இடம் பெறுகின்றனர். இந்த சம்பவமே ஒட்டுமொத்த 'இந்திர தேச சரித்திரத்தையும்தாங்கி நிற்கிறது.  


பறையர் என்ற சாதி அடையாளம் திணிக்கப்பட்ட அடையாளம் என்று வாதிட அந்த சம்பவம் துணை செய்கிறது. தீண்டாமை ஒரு தண்டனையாக பெளத்தர்கள் மீது விதிக்கப்பட்டத்து என்பதற்கான காரண காரியங்களை அந்தச் சம்பவமே வழங்குகிறதுஅதாவது, அந்த நிகழ்ச்சியே வரலாற்றைசரிவிற்கு முன்’, ‘சரிவிற்குப் பின்என்று இரண்டாக வகிரவும் உதவுகிறது. (வரலாறு ஏன் எப்பொழுதும் இரண்டாகவே பிளக்கிறதுஅது நேர்கோடு இல்லையென்றால், ஓங்கி ஒரு வெட்டு வெட்ட, மூன்றாய் நான்காய் அல்லவா பிளவுபட வேண்டும்?)


ஆனால், தேவேந்திரர் வீழ்த்தப்பட்ட சரித்திரத்தில் இப்படியொரு சம்பவத்தை நம்மால் கட்டமைக்க முடியவில்லை. அதற்கான காலவெளி திரண்டு நிற்கிறது என்றாலும், சம்பவமென்று எதுவும் உருவாகவில்லை. உதாரணமாய், பள்ளு இலக்கியங்கள் எழுதப்பட்ட பின்னரேபள்ளர்என்ற அடையாளம் தமிழ்ச்சூழலில் அறிமுகமாகிறது என்பதை அனுமானிக்க முடிந்தாலும், அப்படி நிகழ்ந்த சம்பவத்தை உங்களால் கற்பனை செய்ய முடியவில்லைஎன்ன நோக்கத்திற்காக அல்லது காரணத்திற்காக மள்ளர் என்ற பெயர் பள்ளர் என்று மாற்றப்பட்டது என்பதை விளக்கும் மைய சம்பவம் அங்கே இல்லை.  


இப்படியான மைய சம்பவம், வாய்மொழி அல்லது எழுத்து ஆதாரங்களிலிருந்து கிளம்பி வருவது வழக்கம். அயோத்திதாசருக்கு அதுநாரதிய புராண சங்கைத் தெளிவில்வாய்த்ததுகூடுதலாக, இதே பாணி சம்பவத்தை பிரதிபலிக்கும் பறையர் சாதித் தோற்றப் புராணங்களும் நமக்குக் கிடைக்கின்றன (பார்க்க, ‘போலச்செய்தலும் திரும்பச்செய்தலும்என்ற கட்டுரை, ‘நான் ஏன் தலித்தும் அல்ல?’ என்ற நூலில், டி. தருமராஜ், கிழக்கு பதிப்பகம், 2015).  இதன்மூலம், அயோத்திதாசர் சொல்லும்பறையப் போகிறார்கள் நிகழ்ச்சிகாரணகாரிய வலுவுடன் உருவாக்கப்பட்டுவிடுகிறது. தேவேந்திரர் கதையில், மள்ளரிலிருந்து பள்ளராக தரமிறக்கப்பட்ட சம்பவம் குறித்து எழுத்துப் பதிவு எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை. மக்களுடைய ஞாபகங்களிலோ அப்படியொன்று சுத்தமாக இல்லவே இல்லை.  


இது முக்கியமான விஷயமொன்றை நமக்குச் சொல்கிறது: எந்தவொரு வரலாறும் ஞாபகங்களிலிருந்தே உருவாக்கப்படுகிறது. அப்படி உருவாக்கப்படும் வரலாறு, ஞாபகத்தைக் கொன்றும் விடுகிறது என்று பியர் நோரா சொல்வதை நாம் நேர்ப்பொருளில் விளங்கிக் கொள்ள வேண்டும் என்று அவசியமில்லைஅயோத்திதாசரின் விஷயத்தில், அவர் எழுதும்இந்திர தேச சரித்திரம்பறையர் மத்தியில் வழங்கி வரும்என் தம்பி பாப்பான்என்ற வாய்மொழி ஞாபகத்தை வெற்றிகரமாமக் கொன்று விடுகிறது.  


ஆனால், தேவேந்திரர் புராணத்தில் மள்ளர்கள் பள்ளராக்கப்பட்டனர்  என்பதற்கான வாய்மொழி ஞாபகங்கள் கிடைக்கவில்லையே தவிர, அந்த விஷயத்தை நெடுநாளாய் மறந்திருந்தோமே என்று தேவேந்திர சமூகம் அங்கலாய்க்க தொடங்கியிருக்கிறதுபழைய ஞாபகங்களைக் கொல்வதும் மறதியைக் கண்டுபிடிப்பதும் ஏறக்குறைய ஒன்று.

Comments

Popular posts from this blog

வேற்றுமெய்யும் வேற்றுமையும்

பால்ய கரகாட்டக்காரி கௌசல்யாவின் கதை

‘நாட்டார் கலைஞர்கள் எவ்வாறு உருவாகுகிறார்கள்?’ என்று தேடிக் கொண்டிருந்த போது தற்செயலாகத்தான் கௌசல்யாவை சந்தித்தேன். ‘நானும் கலைஞர் தான், சார்’ என்று வந்து நின்ற சிறுமிக்கு பதிமூன்று, பதினான்கு வயது இருக்கலாம். ‘நீயா?’ ‘ஆமா, சார்’, சங்கோஜத்தோடு சொன்னாள். நான் சந்தேகப்படுகிறேன் என்று தெரிந்ததும், பக்கத்தில் நின்றிருந்த மாரியம்மாளை ‘நீ சொல்லும்மா, அப்ப தான் நம்புவாங்க’ என்பது போல பார்த்தாள். அதற்கு மாரியம்மா, ’ரெண்டு வருசமா இவ ஆடி தான் சார் சாப்புடுறோம்’ என்றார்.  சிறுமி கெளசல்யா, ஒரு கரகாட்டக் கலைஞராம்!   அந்தத் தற்செயல் இப்படித்தான் நடந்தது.  ஒரு பால்ய கரகாட்டக்காரியை நான் முதல் முறையாகச் சந்திக்கிறேன். ************ நான் பார்க்க வந்தது மாரியம்மாளை.  அவர் ஒரு மேனாள் கரகாட்டக்கலைஞர்.  வயது ஐம்பதுக்குள் இருக்கலாம்.  கரகாட்டக்கலைஞர்கள் சீக்கிரமே ஓய்வு பெற்றுவிடுகிறார்கள். பெண் கலைஞர்கள் என்றால் இன்னும் வேகமாக, முப்பத்தைந்தை தாண்ட மாட்டார்கள்.   'ஓய்வு' என்பது கூட தவறான வார்த்தை தான்.     நாட்டார் கலைஞர்களுக்கு 'ஓய்வ...

அன்புள்ள ஜெயமோகன்

அன்புள்ள தர்மராஜ் அந்த ' நாலைந்துபேரில் ' நானும் ஒருவன் என அறிந்திருப்பீர்கள். ஆனால் அதில் எனக்குச் சொல்ல ஏதுமில்லை. எழுத்தாளனாகத் தெரிந்துகொள்வதோடு சரி. எங்காவது புனைவில் அவை என்னை பாதித்து வெளிப்பாடு கொள்ள்லாம்.   இப்போது தளம் சிறப்பாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்.   அப்புறம் என் எழுத்து பற்றி. என்னுடையது கோணங்கியின் ' ஆட்டமாட்டிக் ' எழுத்து இல்லை. அது மொழிவழியாக வெளிப்படும் உள்ளம் , உணர்ச்சி மட்டுமே. கற்பனாவாதத்தின் ஒரு தளத்தில் அதற்கு இடமுண்டு. அது எழுத்தின் ஒரு சிறிய பகுதி என்று நான் அறிவேன் அதுவும் ஒரு மனஎழுச்சியின் கனத்தில் மட்டுமே அது சாத்தியம் என்றும் அதை ஒரு ' கிராஃப்ட் ' ஆக மாற்றமுடியாது என்றும் அறிவேன்.   மேலும் வெண்முரசின் எல்லா நாவல்களும் ஒரே தளத்தை , மொழியை சார்தவை அல்ல. மிக திட்டவட்டமான அரசியலும் , தத்துவமும் , உணர்ச்சிகளும் நாடகத்தருணங்களும் மட்டுமல்ல குழந்தைக்கதைகளும் சாகசக்கதைகளும் கொண்டது அது. இப்போது பிரயாகை மிக நேரடியான நடை கொன்டது இந்தியச் சமூகத்தின் சமூகவியல் -அழகியல் உள்ளடக்கம் பற்றிய என் பார்வை அதில் உ...