Skip to main content

நாத்திகக் காப்பு


கேள்வி:

பாபர் மஸ்ஜித்தை இடித்து விட்டு, ராமருக்குக் கோவில் கட்டுவதை எப்படி அணுகுவது?


பதில்:

அந்த விஷயத்திலிருந்து தொலைதூரம் விலகி வந்து விடுவது தான் நமது அணுகுமுறையாக இருக்க வேண்டும்.


காலம்காலமாகத் தமிழகம், இது போன்ற இந்திய வெறித்தனங்களிடமிருந்து தப்பித்து வருவது இந்த விலகல் மனப்பான்மை மூலம் மட்டுமே.  தென்னிந்தியாவிற்கென்று தனி மொழிக்குடும்பம், தனி வரலாறு, தனி பண்பாடு, தனி நிலப்பரப்பு, தனி யோசனை என்று வலியுறுத்தி வருவதற்கான முக்கியமான காரணம் இது.  வட இந்தியா என்று அழைக்கப்படும் கங்கைச் சமவெளி குரோதம் நிரம்பிய சிதறல்களால் செய்யப்பட்டிருக்கிறது.  அவர்கள் நமக்குச் சொல்வது போல, மொழி அடிப்படையில் கூட அங்கே ஒருங்கிணைப்பு சுத்தமாகக் கிடையாது.  சமூக நீதியை வட இந்திய சமூகங்கள் ஒரு பேச்சுக்குக் கூட இன்னமும் கையிலெடுக்கவில்லை.  அம்பேத்கர் என்ற ஒரு நபர் வரலாற்றில் இல்லையென்றால், வட இந்தியாவை நாம் மிகத் தாராளமாககாட்டுமிராண்டி நிலம்என்று சொல்லிவிடமுடியும்.  மத அபிமானத்தை வெறியாக வளர்த்து வந்த வரலாறு அவற்றிற்கு உண்டு.


தமிழகத்தின் மிகப்பெரிய சிக்கல், இந்த வெறித்தனத்திலிருந்து கவனமாக விலகி நிற்பது தான்.  வரலாறு நெடுக நாம் இதைத்தான் செய்து வந்திருக்கிறோம்.  அதனாலே கூட, எந்தவொரு வெறிக்கும் எதிரான குண இயல்புகளை தமிழ் கொண்டிருக்கிறது.  மத வியாபாரத்திற்கு எதிரான குரல்கள் தமிழகத்தில் தொடர்ந்து பிரபலமாக இருந்து வருவதன் சூட்சுமமும் இதுவே.  


தமிழ் தேசியம்என்ற பெயரில் பேசப்படும் அத்தனை விஷயங்களும் அரசியல் அதிகாரம் சார்ந்த முன்னெடுப்புகள் என்பதை விடவும்,  இந்தியப் பைத்தியக்காரத்தனத்திலிருந்துவிலகி நிற்பதற்கான முயற்சிகள் என்பதே உண்மை.  பாப்ரி மஸ்ஜித் போன்ற சிக்கல்கள் தமிழகத்திற்குள்ளும் நுழைய முயற்சிக்கும் பொழுது, நமது எல்லையை மூடி விடுவதே சிறந்த முடிவு.  அவர்கள், அவர்களுக்குள்ளே அடித்துக் கொண்டு ஒரு முடிவை எட்டட்டும் என்று சொல்வதே புத்திசாலித்தனம்.  பாண்டவர் ஐவரும், கெளரவர் நூற்று சொச்சமும் பெரும் போரில் ஈடுபட்டு, உயிர்களைப் பலி கொண்ட போது கூட, நம்மவர்கள் அவர்களுக்குக் கஞ்சி காய்ச்சி ஊற்றினார்களே தவிர, எந்தத் தரப்பிலும் வாள் சுழற்றவில்லை.     




இன்றைக்கும், இந்த இந்தியப் பைத்தியக்காரத்தனத்தில் கலந்து கொள்ளச் சொல்லி நமக்குள்ளேயே குரல்கள் கேட்கின்றன.  ராமர் என்றும், ஆண்டாள் என்றும், முருகன் என்றும் இங்கும் பரபரப்புகள் உருவாக்க முயற்சிகள் நடக்கின்றன.  இதன் மறுபுறம், இஸ்லாமின் காருண்யம் குறித்த சங்கதிகளும் பரப்பப்படுகின்றன.  பாப்ரி மஸ்ஜித்திற்கு மாற்றாக தரப்பட்ட நிலத்தில் மருத்துவமனை கட்டப்போகிறார்கள் என்ற செய்தி அப்படியொன்று.  இதில், தமிழ் நியாயம் என்று ஒன்று உண்டு என்றால், அது இவ்விரண்டு தரப்பையும் சரிசமமாய் கரித்துக் கொட்டுவது!


இருபதாம் நூற்றாண்டில், பெரியார் இந்த நிலைப்பாட்டையேநாத்திகம்என்ற பெயரில் செய்து காட்டினார்.  எல்லாவித மத அபிமானங்களையும் பாரபட்சமின்றி மறுத்தல்.  காலம்காலமாக தமிழ்ச் சித்தர் மரபு இதைத்தான் செய்து வந்திருக்கிறது.  சித்தர்களின் கேள்விகளிலும் பெரியாரின் கேள்விகளிலும் தத்துவார்த்த நியாயங்களைத் தேடக் கூடாது.  அவை, வடக்கிலிருந்து கிளம்பும் அடிப்படைவாத சிந்தனைகளிலிருந்து தமிழகத்தைக் காக்கும் அரண்.  எல்லைகளை மூடும் செயல்.  பெரியாரின் நாத்திகம், பிராமண எதிர்ப்பையும் வலுவாகக் கொண்டிருப்பதற்கானக் காரணம், தமிழகத்து பிராமணர்களே இந்தியத் தூதர்களாக இங்கே பணியாற்றுகிறார்கள் என்பது தான்.  அது, காங்கிரஸாக இருக்கட்டும், பாரதிய ஜனதாவாக இருக்கட்டும், இந்திய மதவெறித்தனத்தைதேசியம்என்ற பெயரில் தமிழகத்தில் விநியோகிக்கிற வேலையை பிராமணர்களே முன்னின்று செய்கிறார்கள். 


இந்தச் சூழலில், தமிழகத்தில் புத்திசாலித்தனமாக செய்ய வேண்டிய காரியம் ஒன்றே ஒன்று தான் - தமிழக எல்லைக் கதவுகளைப் பெரியார் பூட்டு கொண்டு இழுத்து மூடுவது!

Comments

Popular posts from this blog

பால்ய கரகாட்டக்காரி கௌசல்யாவின் கதை

‘நாட்டார் கலைஞர்கள் எவ்வாறு உருவாகுகிறார்கள்?’ என்று தேடிக் கொண்டிருந்த போது தற்செயலாகத்தான் கௌசல்யாவை சந்தித்தேன். ‘நானும் கலைஞர் தான், சார்’ என்று வந்து நின்ற சிறுமிக்கு பதிமூன்று, பதினான்கு வயது இருக்கலாம். ‘நீயா?’ ‘ஆமா, சார்’, சங்கோஜத்தோடு சொன்னாள். நான் சந்தேகப்படுகிறேன் என்று தெரிந்ததும், பக்கத்தில் நின்றிருந்த மாரியம்மாளை ‘நீ சொல்லும்மா, அப்ப தான் நம்புவாங்க’ என்பது போல பார்த்தாள். அதற்கு மாரியம்மா, ’ரெண்டு வருசமா இவ ஆடி தான் சார் சாப்புடுறோம்’ என்றார்.  சிறுமி கெளசல்யா, ஒரு கரகாட்டக் கலைஞராம்!   அந்தத் தற்செயல் இப்படித்தான் நடந்தது.  ஒரு பால்ய கரகாட்டக்காரியை நான் முதல் முறையாகச் சந்திக்கிறேன். ************ நான் பார்க்க வந்தது மாரியம்மாளை.  அவர் ஒரு மேனாள் கரகாட்டக்கலைஞர்.  வயது ஐம்பதுக்குள் இருக்கலாம்.  கரகாட்டக்கலைஞர்கள் சீக்கிரமே ஓய்வு பெற்றுவிடுகிறார்கள். பெண் கலைஞர்கள் என்றால் இன்னும் வேகமாக, முப்பத்தைந்தை தாண்ட மாட்டார்கள்.   'ஓய்வு' என்பது கூட தவறான வார்த்தை தான்.     நாட்டார் கலைஞர்களுக்கு 'ஓய்வு' என்பதே கிடையாது.  கலைஞர்க

5 கலவரங்களும் கதையாடல்களும்

5   கலவரங்களும் கதையாடல்களும்  க . இராமபாண்டி   விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டத்தில் புதுப்பட்டி எனும் ஊர் உள்ளது . இவ்வூரில் 18 வகைச் சாதியினர் உள்ளனர் . இங்கு 1918ஆம் ஆண்டிலிருந்து 2000ம் ஆண்டு வரை பல்வேறு காரணங்களால் சாதிய மோதல்கள் நடைபெற்று வந்துள்ளன .   1918 - ஆம் ஆண்டு பறையர்களுக்கும் (அப்பொழுது 70 குடும்பங்கள்) பண்ணாடிகளுக்கும் (150 குடும்பங்கள்) சுடுகாட்டுப் (பறையர்கள் பயன்படுத்திய சுடுகாட்டை பண்ணாடிகள் பயன்படுத்தியதால்) பிரச்சினை ஏற்பட்டு பண்ணாடி சமூகத்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர் . காவல் துறையினர் பறையர்களில் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்கின்றனர் .   காவல் துறையினரின் தொந்தரவு தாங்கமுடியாமல் , பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருவில்லிப்புத்தூர் பங்குத் தந்தை பிரெஞ்சுச் சாமியார் மாஜி அருளப்பரைச் சந்தித்து ‘நாங்கள் கிறித்தவ மதத்திற்கு மாறுகிறோம் . எங்களை காப்பாற்றுங்கள் ’ என்று கூறுகின்றனர் . மாஜி அருளப்பர் காவல் நிலையத்திற்குச் சென்று , ‘பிரச்சினை என்பது இரு பிரிவினருக்கும் தான் . ஆதலால் , இரு பிரிவினர் மீதும் வழக்குப் பதிவு செய்யுங

வன்முறையை வன்முறையாலும் புனைவை புனைவாலும்... தேவேந்திரர் புராணம்!

தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி? (‘இந்திர தேச சரித்திரம்’ என்ற தொடர் கட்டுரையிலும், ‘பறையர் என்ற பெயரின் உற்பவம்’ என்ற கட்டுரையிலும் பிராமண எதிர்ப்பின் வரலாற்றை கோவில் உரிமைகள், பூஜை புனஸ்காரங்கள் சார்ந்து ஒரு புனைவு போல அயோத்திதாசர் சித்தரித்திருப்பார்.  இப்படியான வரலாறு குறித்து என்னிடம் சில கேள்விகள் இருந்தன:   ‘சாதித் துவேசம் என்பது பிராமணர்களின் சதி’ என்ற வாதம் எவ்வளவு தீர்க்கமான உண்மை? பறையர் சாதிக்கு சொல்லப்படுவது போல தமிழகத்தின் அத்தனை சாதிகளுக்கும் தனித்தனியே ‘பிராமண எதிர்ப்பு’ வரலாறு இருக்க முடியுமா?  அப்படி இருந்தன என்றால் அவை எங்கே? இல்லை என்றால் ஏன் இல்லை?  இதற்காக, வேளாண் சாதி என்று தங்களைப் பெருமையாக அடையாளப்படுத்திக் கொள்ளும் தேவேந்திரர்கள் ‘பிராமண சூழ்ச்சியால்’ இன்றைய இழிநிலையை அடைந்தார்கள் என்று தொனிக்கக்கூடிய புனைவரலாறு ஒன்றை ‘தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி?’ என்ற பெயரில் எழுதினேன்.  அதை அம்மக்கள் மத்தியில் பரவவும் செய்தேன். ஆதியில் அவர்கள் பெளத்தர்களாக இருந்தார்கள் என்றும், போலி பிராமணர்களின் சூழ்ச்சியால் இத்தாழ்நிலை அடைந்தார்கள் என்றும் என்னால் ஏறக