Skip to main content

பெளத்தராகா நின்ற அயோத்திதாசர்!

'Becoming is certainly not imitating, or identifying with some- thing; neither is it regressing-progressing; neither is it correspond- ing, ... [nor] producing ... Becoming is a verb with a consistency all its own; it does not reduce to, or lead back to, "appearing," "being," "equalling" or "producing". (A Thousand Plateaus - Capitalism and Schizophrenia, Gilles Deleuze and Felix Guattari, P. 239).





ஆகுதலின் மீது அயோத்திதாசருக்கு மிகப் பெரிய மயக்கம் இருந்ததுஆளைச் சொக்க வைக்கும் மயக்கம்.  ‘பெளத்தர் ஆகுதலுக்காகஅவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் ஒரு நூற்றாண்டு கழித்தும் நம்மைக் கவர்கின்றனஒரு விஷயத்தில் இறங்கினால் அதிலேயே கிறங்கிப் போதல் என்பார்களே, அதை நீங்கள் அவரதுஆகுதலில்பார்க்க முடியும்.


பறையர்என்று ஏற்கனவே ஸ்தாபிக்கப்பட்ட நிலையிலிருந்துபெளத்தர்என்ற நிலையை அடைதலே அவருக்கு முன்னிருந்த சவால்பறையரும் பெளத்தரும், இருவேறு எதிர்நிலைகள் என்பதை அவர் வரலாற்றிலிருந்து தருவித்துக் கொண்டார்பறையர் என்பதற்குப் பதில் வேறெந்தவொரு சாதி அடையாளத்தையும் இங்கே பொருத்திக் கொள்ளலாம்பள்ளர் / பெளத்தர், அருந்ததியர் / பெளத்தர், பிராமணர் / பெளத்தர், நாடார் / பெளத்தர், வன்னியர் / பெளத்தர்இப்படி வரிசையாய் சொல்ல முடியும்எல்லா சாதி அடையாளங்களும் வைதீக அடையாளங்களேஇதன் எதிர்நிலை, பெளத்தம்பெளத்தராகுதலே சாதியிலிருந்து வெளியேறுதல்யாராகவாயினும் பெளத்தராகுதலே கருமம்!  


நீண்ட உரையாடலுக்குப் பின் அம்பேத்கர் இதே முடிவிற்கு ஆய்வுபூர்வமாக வந்து சேர்கிறார்சாதிக்கு எதிர்நிலை பெளத்தமே என்பதை வரலாறு நெடுகிலும் பலர் இது போல நிரூபித்திருக்கிறார்கள்நமது சமீபத்திய உதாரணங்கள், அயோத்திதாசர், மகாத்மா பூலே, அம்பேத்கர்.  


இவர்களுள் அயோத்திதாசர் மட்டுமே பெளத்தராகுதலைக் கவனப்படுத்தியவர்அவருக்கு பாலி மொழியிலோ அல்லது வேறெந்தவொரு மொழியிலோ காணக்கிடைக்கும் பெளத்த பிரதிகளில் திருப்தியில்லைஅதற்கான மூலகங்கள் தமிழ் மொழியில் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்அதைத் தேடத்தொடங்குகிறார்அதைக் கண்டறியவும் செய்கிறார்பெளத்தத்தின் முன்னொட்டாக தமிழைக் கொண்டு வந்து சேர்த்ததே அவரது பெளத்தராகும் பயணத்தின் தொடக்கம்நாமெல்லாம் பெளத்த ஞாபகங்களைக் கொண்டவர்கள் என்பதை அவர் ஆழமாய் நம்ப விரும்பினார்ஆழமான நம்பிக்கையே உங்களை ஏதொன்றாகவும் ஆக அனுமதிக்கிறதுஇந்தத் தேடலின் உச்சமே, நமது சடங்குகளையும் திருவிழாக்களையும் பண்டிகைகளையும் பெளத்த அனுபவங்களாக மடைமாற்றுதல்அவர் கொஞ்சம் கொஞ்சமாக பெளத்தராகிக் கொண்டிருக்கிறார் என்பதன் அறிகுறி இது.   


அயோத்திதாசருடைய வாழ்க்கையின் காவிய தருணம் என்று நான் இதையே சொல்வேன்அவர், பெளத்தராகிக் கொண்டேயிருந்தார்மீண்டும் மீண்டும் பெளத்தராகிக் கொண்டேயிருந்தார்திருக்குறள் உரையை எழுதும் போதும் ஆகிக் கொண்டிருந்தார்ஒளவை குறித்து எழுதும் போதும் ஆகிக் கொண்டிருந்தார்இலவச கல்வி கேட்டு எழுதும் பொழுதும் ஆகிக் கொண்டிருந்தார்தமிழன் இதழை நடத்தும் பொழுதும் ஆகிக் கொண்டிருந்தார்வாழ்நாளில், எந்தத் தருணத்திலும், தான் பெளத்தராகி விட்டதாக அவர் துளியும் நினைக்கவில்லைஆகிக் கொண்டே இருந்தார்அம்பேத்கர் எதை விட்டாரோ (பெளத்தர் ஆகி விடுதல்) அதில் அயோத்திதாசர் இருந்து கொண்டிருந்தார்.   


என்னைப் பொறுத்தவரை, அயோத்திதாசருக்குப் பெளத்ததை அடைதல் இரண்டாம்பட்சமாக இருந்திருக்க வேண்டும்ஏறக்குறைய, அதை அடையாமலிக்கக் கூட அவர் முயற்சித்திருக்கலாம்வீடடைதல் அல்லது கூடடைதல் என்ற அனைத்தும் மரணத்தின் போலிகள் என்று அவர் அறிய மாட்டாரா என்னமரணத்தை வெல்வது தான் உச்சபட்ச நோக்கம் என்றால், அடைதலை விடவும் ஆகுதலே உன்னதம் என்பதை அவர் அறிந்திருக்க வேண்டும்ஆகுதல் என்றால்  ஒரு நிலைக்கும் மறு நிலைக்குமிடையே நழுவுதல்ஒரு கட்டத்தில் இரு வேறு நிலைகளும் மறைந்து, நழுவுதலே கருமமாகிறது; பின், கருமமே கண்ணாகிறது.  


இதையே நான்ஆநின்றுஎன்று சொல்ல விரும்புவேன்பெளத்தராகுதல் என்றால், பெளத்தராகா நின்றல் என்று சொல்லித் தருகிறது தமிழ்அந்த வகையில், பெளத்தராகா நின்றலே அயோத்திதாசரின் வேட்கை.   தமிழ் பெளத்தத்தின் காவிய தருணம் இது.    


இந்த ஆகா நின்றலே, அவர் பால் என்னை ஈர்த்துக் கொண்டிருக்கிறதுஅம்பேத்கர் இறுதியில் பெளத்தரானார்; பிறரையும் மாறச்சொன்னார்பெரியார் நாத்திகரானார்; எல்லோரையும் மாறச்சொன்னார்இதைப் போல அயோத்திதாசரும் பெளத்தர் ஆகியிருந்தால், என்னையும் ஆகச் சொல்லியிருந்தால் தெறித்து ஓடியிருப்பேனோ என்னவோஅவர்பெளத்தராகாமல் நிற்பதேஒரு நூற்றாண்டிற்குப் பின்னும் அவரைக் கொண்டாடச் சொல்கிறது.


ஆகா நிற்பது, ஆகப்பெரிய சிந்தனைச் சுழல்எப்படி இந்த உலகில் ஆணாக மாறுவதற்கு பெரிய மெனக்கிடல்கள் தேவையில்லையோ (இந்த சமூகமே அதற்கான உத்திகளைக் கொண்டிருக்கிறது), அதே போல இந்திய சமூகத்தில் வைதீகனாக மாறுவதற்கு பெரிய யத்தனங்கள் வேண்டியதில்லைநீங்கள், உங்களை அறியாமலேயே வைதீகனாக மாற்றப்பட்டு விடுகிறீர்கள்அதைத் துறந்து பெளத்த நிலையை நோக்கி நகர்வதே ஆகப்பெரிய அரசியல்.


அயோத்திதாசரின் தனித்துவம், ‘ஆகுதலின் அரசியல்என்று சொல்லலாம்அம்பேத்கரிடமோ பெரியாரிடமோ நாம் பார்க்க முடியாத அரசியல்அம்பேத்கர், இந்த தேசத்தின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பெளத்தத்தை விடுதலைக் கருவியாக அறிவிக்கிறார்; பெரியார், வைதீகத்தின் பிடியிலிருந்து வெளியேறும் விடுதலை வழியாக பகுத்தறிவையும் நாத்திகத்தையும் அறிவிக்கிறார்இவ்விருவரின் அரசியலும், அடைய வேண்டியதை அறிவுறுத்துவதும், அதைச் செயல்படுத்துவதுமாக இருக்கிறதுஅவர்கள் தாங்கள் கண்டடைந்ததை மலை மேலிருந்து பொழியத் தொடங்குகிறார்கள்.


அயோத்திதாசரிடம் இப்படியான எந்தப் பொழிவையும் நீங்கள் பார்க்க முடிவதில்லைஅவரிடம் வெளிப்படுவது, அவதானம்.  ‘நாமெல்லாம் பூர்வத்தில் பெளத்தர்களாக இருந்தோம்என்ற அவதானம்இந்த அவதானத்தின் மேல் வலுவாகக் காலூன்றி பெளத்தராகா நிற்க ஆரம்பிக்கிறார்அதாவது, என்றென்றைக்கும் பெளத்தர் ஆகிக் கொண்டேயிருக்க ஆரம்பிக்கிறார்ஆகுதலின் மீது அயோத்திதாசருக்கு மிகப் பெரிய மயக்கம் இருந்தது.



Comments

Popular posts from this blog

பால்ய கரகாட்டக்காரி கௌசல்யாவின் கதை

‘நாட்டார் கலைஞர்கள் எவ்வாறு உருவாகுகிறார்கள்?’ என்று தேடிக் கொண்டிருந்த போது தற்செயலாகத்தான் கௌசல்யாவை சந்தித்தேன். ‘நானும் கலைஞர் தான், சார்’ என்று வந்து நின்ற சிறுமிக்கு பதிமூன்று, பதினான்கு வயது இருக்கலாம். ‘நீயா?’ ‘ஆமா, சார்’, சங்கோஜத்தோடு சொன்னாள். நான் சந்தேகப்படுகிறேன் என்று தெரிந்ததும், பக்கத்தில் நின்றிருந்த மாரியம்மாளை ‘நீ சொல்லும்மா, அப்ப தான் நம்புவாங்க’ என்பது போல பார்த்தாள். அதற்கு மாரியம்மா, ’ரெண்டு வருசமா இவ ஆடி தான் சார் சாப்புடுறோம்’ என்றார்.  சிறுமி கெளசல்யா, ஒரு கரகாட்டக் கலைஞராம்!   அந்தத் தற்செயல் இப்படித்தான் நடந்தது.  ஒரு பால்ய கரகாட்டக்காரியை நான் முதல் முறையாகச் சந்திக்கிறேன். ************ நான் பார்க்க வந்தது மாரியம்மாளை.  அவர் ஒரு மேனாள் கரகாட்டக்கலைஞர்.  வயது ஐம்பதுக்குள் இருக்கலாம்.  கரகாட்டக்கலைஞர்கள் சீக்கிரமே ஓய்வு பெற்றுவிடுகிறார்கள். பெண் கலைஞர்கள் என்றால் இன்னும் வேகமாக, முப்பத்தைந்தை தாண்ட மாட்டார்கள்.   'ஓய்வு' என்பது கூட தவறான வார்த்தை தான்.     நாட்டார் கலைஞர்களுக்கு 'ஓய்வு' என்பதே கிடையாது.  கலைஞர்க

5 கலவரங்களும் கதையாடல்களும்

5   கலவரங்களும் கதையாடல்களும்  க . இராமபாண்டி   விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டத்தில் புதுப்பட்டி எனும் ஊர் உள்ளது . இவ்வூரில் 18 வகைச் சாதியினர் உள்ளனர் . இங்கு 1918ஆம் ஆண்டிலிருந்து 2000ம் ஆண்டு வரை பல்வேறு காரணங்களால் சாதிய மோதல்கள் நடைபெற்று வந்துள்ளன .   1918 - ஆம் ஆண்டு பறையர்களுக்கும் (அப்பொழுது 70 குடும்பங்கள்) பண்ணாடிகளுக்கும் (150 குடும்பங்கள்) சுடுகாட்டுப் (பறையர்கள் பயன்படுத்திய சுடுகாட்டை பண்ணாடிகள் பயன்படுத்தியதால்) பிரச்சினை ஏற்பட்டு பண்ணாடி சமூகத்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர் . காவல் துறையினர் பறையர்களில் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்கின்றனர் .   காவல் துறையினரின் தொந்தரவு தாங்கமுடியாமல் , பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருவில்லிப்புத்தூர் பங்குத் தந்தை பிரெஞ்சுச் சாமியார் மாஜி அருளப்பரைச் சந்தித்து ‘நாங்கள் கிறித்தவ மதத்திற்கு மாறுகிறோம் . எங்களை காப்பாற்றுங்கள் ’ என்று கூறுகின்றனர் . மாஜி அருளப்பர் காவல் நிலையத்திற்குச் சென்று , ‘பிரச்சினை என்பது இரு பிரிவினருக்கும் தான் . ஆதலால் , இரு பிரிவினர் மீதும் வழக்குப் பதிவு செய்யுங

வன்முறையை வன்முறையாலும் புனைவை புனைவாலும்... தேவேந்திரர் புராணம்!

தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி? (‘இந்திர தேச சரித்திரம்’ என்ற தொடர் கட்டுரையிலும், ‘பறையர் என்ற பெயரின் உற்பவம்’ என்ற கட்டுரையிலும் பிராமண எதிர்ப்பின் வரலாற்றை கோவில் உரிமைகள், பூஜை புனஸ்காரங்கள் சார்ந்து ஒரு புனைவு போல அயோத்திதாசர் சித்தரித்திருப்பார்.  இப்படியான வரலாறு குறித்து என்னிடம் சில கேள்விகள் இருந்தன:   ‘சாதித் துவேசம் என்பது பிராமணர்களின் சதி’ என்ற வாதம் எவ்வளவு தீர்க்கமான உண்மை? பறையர் சாதிக்கு சொல்லப்படுவது போல தமிழகத்தின் அத்தனை சாதிகளுக்கும் தனித்தனியே ‘பிராமண எதிர்ப்பு’ வரலாறு இருக்க முடியுமா?  அப்படி இருந்தன என்றால் அவை எங்கே? இல்லை என்றால் ஏன் இல்லை?  இதற்காக, வேளாண் சாதி என்று தங்களைப் பெருமையாக அடையாளப்படுத்திக் கொள்ளும் தேவேந்திரர்கள் ‘பிராமண சூழ்ச்சியால்’ இன்றைய இழிநிலையை அடைந்தார்கள் என்று தொனிக்கக்கூடிய புனைவரலாறு ஒன்றை ‘தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி?’ என்ற பெயரில் எழுதினேன்.  அதை அம்மக்கள் மத்தியில் பரவவும் செய்தேன். ஆதியில் அவர்கள் பெளத்தர்களாக இருந்தார்கள் என்றும், போலி பிராமணர்களின் சூழ்ச்சியால் இத்தாழ்நிலை அடைந்தார்கள் என்றும் என்னால் ஏறக