Skip to main content

யோசனா என்ற கோதையும், மாடத்தி என்ற ஆண்டாளும்!

ஒரு சிறுபெண்ணுக்கு மானசீகக் காதலன் இருந்தான்.   ஒரு நாள், காதலை அவனிடம் சொல்லி விட அவள் முடிவு செய்தாள்.   காதலனைத் தேடியும் வந்தாள். வந்த இடத்தில் அவளைக் கூட்டமாய் வன்புணர்ச்சி செய்து, கொன்று போடுகிறார்கள்வன்புணர்ந்த கூட்டத்தில் மானசீகக் காதலனும் இருந்தான் என்பதை அறிந்தே அவள் இறந்தாள். இது தான் மாடத்தியின் கதை.






மேம்போக்காகப் பார்க்க, இந்தக் கதை அறிவியல் முரணால் கட்டப்பட்டிருப்பது போலத் தெரியும்மானசீகத்திற்கும் யதார்த்ததிற்குமான முரணைப் பேசுவதாகத் தோன்றலாம்நினைப்பை விடவும் நிஜம் அசிங்கமானது என்ற உண்மையை கோதை எத்தனைக் கொடூரமாக உணர நேர்ந்தது என்பதை விளக்க வந்தது போலத் தெரியலாம்ஏராளமான யதார்த்தவாதக் கலைப்படைப்புகள் இதைத்தான் செய்திருக்கின்றனபுதுமைப்பித்தனின் பொன்னகரம் ஒரு உதாரணம்.   


இந்தக் கதையை இன்னும் கொஞ்சம் தீவிரமாக யோசித்துப் பார்க்கிறவர்களுக்கு அதன் இன்னொரு பரிணாமம் எட்டக்கூடும்கூட்டு வன்புணர்ச்சி செய்தவர்கள் குடிபோதையில் இருந்தனர் என்ற செய்தியும் கதையில் வருகிறதுஅப்படியானால் அங்கு நிகழ்ந்த வன்புணர்ச்சி இயல்பானது அல்ல என்று சொல்ல வேண்டும்அந்த இளைஞர்கள் போதையில் நிலைதடுமாறியதால் கொடூரம் நிகழ்ந்தது.  

இந்த இடத்தில் யதார்த்தவாதம் மழுங்க ஆரம்பிக்கிறதுபோதையில் செய்த காரியம் என்பதால், வன்புணர்ச்சியை தற்செயல் அல்லது விபத்து என்று சொல்ல வாய்ப்புகள் உண்டுஇப்படிச் சொன்ன மறுகணம், மைய முரண் அனர்த்தம் நோக்கி நகர்ந்து விடுகிறதுஇனி கதையின் முரண், நோக்கத்திற்கும் தற்செயலுக்குமானதுஅந்தப் பெண்ணின் காதலை வெளிப்படுத்தும் நோக்கத்திற்கும் வன்புணர்ச்சி என்ற விபத்துமே எதிர்நிலைகள்துரதிர்ஷடவசமாக, நோக்கமும் தற்செயலும் முரண்டிக் கொண்டால், அபத்தமே உங்களுக்கு மிஞ்சும்.  


இப்பொழுது, மொத்த பழியையும் விதியின் மேல் கொட்டுகிறோம்அக்குறிப்பிட்ட நேரத்தில், அக்குறிப்பிட்ட இடத்தில், அக்குறிப்பிட்ட பெண் இருந்ததற்கு ஒரு நோக்கம் உண்டு என்றாலும்அந்த நோக்கத்தை, தற்செயல் அல்லது விதி சிதைத்து விடுகிறது என்று கதை திரிகிறதுஇனி, வாழ்வின் அபத்தத்தை அல்லது புதிரை அங்கலாய்ப்பது மட்டுமே கலைப்படைப்பின் நோக்கமாக மாறிவிடுகிறதுஜெயகாந்தனின் அக்னிப்பிரவேசம் மாதிரியான ஒரு படைப்பு உருவாக்க முடியலாம்.


மாடத்தி, அறிவியல் வாதத்தினுள்ளோ அல்லது அபத்த வாதத்தினுள்ளோ இறங்கவில்லைமாறாக, அந்த வன்கொடுமை நிகந்ததற்கு வலுவான சமூக வரலாற்றுக் காரணம் உண்டு என்று நிரூபிக்க முயற்சிக்கிறதுஅந்தக் காரணத்தையும் தெளிவாகச் சொல்லி விடுகிறது; சாதிச் சமூக அமைப்பே அது.  


அந்தப் பெண் மிகத்தாழ்ந்த சாதி; வன்புணர்ந்த கூட்டமோ உயர்ந்த சாதிஇந்த விபத்து வரலாற்றில் ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒன்று என்பதே திரைப்படத்தின் வாதம்இவ்வாறு சொல்வதன் மூலம், கற்பனை - நிஜம் என்ற அறிவியல் முரணோ அல்லது நோக்கம் - தற்செயல் என்ற அபத்த முரணோ அல்ல, தாழ்ந்த சாதி - உயர்ந்த சாதி என்ற சமூக முரணே இந்திய சமூகங்களின் ஒவ்வொரு அசைவையும் தீர்மானிக்கும் சக்தி என்று நீங்கள் நம்ப ஆரம்பிக்கிறீர்கள்.      


இப்பொழுது ஒட்டுமொத்த கதையும் வேறொரு கோணத்தையும் பரிமாணத்தையும் அடையத் தொடங்குகிறதுஒரு சிறுபெண்ணுக்கு மானசீகக் காதலன் இருந்ததாக நீங்கள் கதையை ஆரம்பிக்க முடியாதுகதையில் நடைபெறும் சம்பவங்கள் அனைத்தும் வரலாற்றால் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருப்பதால், அச்சிறுபெண்ணின் பெயர்யோசனாஎன்றிருந்தாலும் அவளைமாடத்திஎன்றே அடையாளப்படுத்த ஆரம்பிக்கிறோம்வரலாறு நெடுகிலும் இவ்வாறு வன்புணர்ச்சி செய்து கொலையுண்ட அத்தனைப் பெண்களும் மாடத்திகளே என்பது நமக்கு உரைக்க ஆரம்பிக்கிறது.  


இப்போது அந்தப் பெண்ணின் கதையில் வரலாறு என்ற அமானுஷ்யம் வந்து உட்கார்ந்து கொள்வதை நம்மால் கவனிக்க முடிகிறதுஇத்திரைப்படம் கலைப்படைப்பா அல்லது வரலாற்று ஆவணமா என்று நமக்கு மயக்கம் ஏற்படுகிறதுஇந்த மயக்கத்தையும் அத்திரைப்படம் தெரிந்தே தான் உருவாக்குகிறது.  


அத்திரைப்படத்தில் வரும் கதாபாத்திரமொன்று, யோசனாவைப் பார்க்கும் பொழுதெல்லாம் மருகுவதும், திகைப்பதும், சில சமயம் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்குவதும், எத்தகைய மனநிலையிலிருந்து உருவாகுகிறதோ அதே மனநிலையை திரைப்படக் கதையாடலும் வெளிப்படுத்துகிறதுயோசனா, சாதாரணப் பெண்ணில்லை, மாடத்தி என்று நமக்கு தொடர்ந்து ஞாபமூட்டியபடி இருக்கிறார்கள்


அதே போல இத்திரைப்படம் தன்னை ஆவணம் போலக் காட்டிக் கொள்வதற்காக கதையோட்டத்திற்குத் தேவைப்படாத பல சம்பவங்களை சொல்லத் தொடங்குகிறதுஉதாரணமாக, தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்களை வன்புணர்தல் உயர்ந்த சாதி ஆண்களின் கேளிக்கை என்பதை நிரூபிக்க, யோசனாவின் தாயை ஒரு உயர்சாதி ஆண் வன்புணரும் காட்சியை ஒரு சாட்சியம் போல நம்மிடம் சமர்பிக்கிறார்கள்.  


ஒரு சிறுபெண்ணின் காதல் கதைக்கு சாதியக் காரணங்களைக் கற்பிப்பதன் மூலம், இக்கதையாடல் என்ன சாதிக்கிறது என்று நாம் கேட்டுப் பார்க்கலாம்மேலே சொன்னது போல, தனி நபர் அனுபவத்தை சமூக அனுபவமாக மாற்ற முடிகிறது. இரண்டு, வாழ்வின் அபத்தங்கள் / புதிர்களுக்கு நீண்ட சமாதானங்களைச் சொல்ல முடிகிறதுமூன்றாவதாக, ஒரு திரைப்படம் கலைப்படைப்பாகவும் ஆவணமாகவும் ஒரு சேர செயல்பட முடியும் என்ற மயக்கத்தை ஏற்படுத்துகிறதுநான்கு, ஒடுக்கப்பட்டோர் விடுதலைக் கருத்தியலைப் பேசிய ஆசுவாசத்தை எல்லோருக்கும் பகிர்ந்தளிக்கிறது.


*


இதையெல்லாம் மீறி, திரைப்படத்தில் அறையுங்குறையுமாய் சொல்லப்பட்டிருக்கும் அச்சிறுபெண்ணின் காதல் கதையை நான் என் போக்கில் இப்படி கற்பனை செய்து கொண்டேன்.    


அதைக் காதல் என்று சொல்ல முடியுமா என்று சிலர் கேட்கக்கூடும்முதற்காதல் என்று அழைப்பதில் எனக்குத் தயக்கமில்லை. முதிரா பருவத்து முதற் காதல்இவ்வகைக் காதலை தமிழில் யாராவது முயற்சி செய்திருக்கிறார்களா என்றால்எனக்கு வரும் ஞாபகம் ஆண்டாள் மட்டுமே.  


இந்தப் பெயர் எப்பொழுது ஞாபகத்திற்கு வந்ததோ அப்போதிருந்து, நீங்கள் வேறொரு திரைப்படத்தைப் பார்க்க ஆரம்பித்து விடுகிறீர்கள்யோசனாவின் கதையை சொல்லி வரும் போது, சாதிய அடக்குமுறை வரலாற்றை விரிவாகப் பேசும் திரைப்படம், பட்டும் படாமலாவது கோதை நாச்சியாரை கோடிட்டுக் காட்டியிருக்கலாம் என்று இதை எழுதிக் கொண்டிருக்கும் போது தோன்றுகிறதுஉண்மை தான், யோசனாவை ஆண்டாள் என்று கண்டால், திரைப்படம் முற்றிலு வேறொரு அனுபவமாக மாறிவிடுகிறது.   


ஆண்டாள் பக்தியால் பாழானவள்அவளது பாடல்களைப் பாசுரங்கள் என்று சொல்லி காயடித்து விட்டதால், முதிராக் காதலின் ரகசியங்களை நம்மால் பூரணமாய் உணர்ந்து கொள்ள முடிந்ததில்லைஆனால், மாடத்தியில் சொல்லப்படும் காதல் அப்படி இல்லைரத்தமும் சதையுமாக இருக்கிறது.  


சிறுமியிலிருந்து பெண்ணுக்கு நழுவிக் கொண்டிருக்கும் ஓருயிர் அடையும் குறுகுறுப்பும், வெகுளியும், தவிப்பும், வேட்கையுமே பாதி படம். மீதப்பகுதியில் சொல்லப்படும், சமூக வரலாற்றுப் பின்புலங்களை மறந்து விட முடிந்தால் நீங்கள் வேறொரு படத்தைப் பார்க்க முடிகிற பாக்கியசாலி


படத்தில் சில தருணங்கள் அற்புதமானவைதாயும் தந்தையும் புணர்வதற்காக எழுந்து செல்லும் போது, தூங்கிக் கொண்டிருப்பதாகக் காட்டப்படும் யோசனாவின் முகம் ஒரு உதாரணம். நீரோடை மீன்கள், முயல், புறா, காணாமல் போன கழுதைக்குட்டி, மாதுளை தின்னும் குரங்குகள், காதலனின் சட்டை என்று கோதையின் உலகில் அபூர்வம் தறிகெட்டு பறக்கிறது.  


தனக்கே தனக்கான வனத்தினுள், அங்குமிங்குமாய் ஒளிந்து நின்று, கண்ணனைப் பார்த்துப் பார்த்துப் பூரித்துப் போகிறாள் யோசனாஒரு கட்டத்தில், கண்ணனை நேரில் பார்த்தே விடுவது என்று கோதை கிளம்பி வரும் போது தான் அந்தத் துர்சம்பவம் நிகழ்ந்து விடுகிறதுகூட்டு வன்புணர்வு!


கோதை, ஆண்டாளாவதற்கும் மாடத்தியாவதற்கும் மயிரிழையே வேறுபாடு என்பது தான் தமிழின் வேடிக்கை!     

Comments

Popular posts from this blog

பால்ய கரகாட்டக்காரி கௌசல்யாவின் கதை

‘நாட்டார் கலைஞர்கள் எவ்வாறு உருவாகுகிறார்கள்?’ என்று தேடிக் கொண்டிருந்த போது தற்செயலாகத்தான் கௌசல்யாவை சந்தித்தேன். ‘நானும் கலைஞர் தான், சார்’ என்று வந்து நின்ற சிறுமிக்கு பதிமூன்று, பதினான்கு வயது இருக்கலாம். ‘நீயா?’ ‘ஆமா, சார்’, சங்கோஜத்தோடு சொன்னாள். நான் சந்தேகப்படுகிறேன் என்று தெரிந்ததும், பக்கத்தில் நின்றிருந்த மாரியம்மாளை ‘நீ சொல்லும்மா, அப்ப தான் நம்புவாங்க’ என்பது போல பார்த்தாள். அதற்கு மாரியம்மா, ’ரெண்டு வருசமா இவ ஆடி தான் சார் சாப்புடுறோம்’ என்றார்.  சிறுமி கெளசல்யா, ஒரு கரகாட்டக் கலைஞராம்!   அந்தத் தற்செயல் இப்படித்தான் நடந்தது.  ஒரு பால்ய கரகாட்டக்காரியை நான் முதல் முறையாகச் சந்திக்கிறேன். ************ நான் பார்க்க வந்தது மாரியம்மாளை.  அவர் ஒரு மேனாள் கரகாட்டக்கலைஞர்.  வயது ஐம்பதுக்குள் இருக்கலாம்.  கரகாட்டக்கலைஞர்கள் சீக்கிரமே ஓய்வு பெற்றுவிடுகிறார்கள். பெண் கலைஞர்கள் என்றால் இன்னும் வேகமாக, முப்பத்தைந்தை தாண்ட மாட்டார்கள்.   'ஓய்வு' என்பது கூட தவறான வார்த்தை தான்.     நாட்டார் கலைஞர்களுக்கு 'ஓய்வு' என்பதே கிடையாது.  கலைஞர்க

5 கலவரங்களும் கதையாடல்களும்

5   கலவரங்களும் கதையாடல்களும்  க . இராமபாண்டி   விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டத்தில் புதுப்பட்டி எனும் ஊர் உள்ளது . இவ்வூரில் 18 வகைச் சாதியினர் உள்ளனர் . இங்கு 1918ஆம் ஆண்டிலிருந்து 2000ம் ஆண்டு வரை பல்வேறு காரணங்களால் சாதிய மோதல்கள் நடைபெற்று வந்துள்ளன .   1918 - ஆம் ஆண்டு பறையர்களுக்கும் (அப்பொழுது 70 குடும்பங்கள்) பண்ணாடிகளுக்கும் (150 குடும்பங்கள்) சுடுகாட்டுப் (பறையர்கள் பயன்படுத்திய சுடுகாட்டை பண்ணாடிகள் பயன்படுத்தியதால்) பிரச்சினை ஏற்பட்டு பண்ணாடி சமூகத்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர் . காவல் துறையினர் பறையர்களில் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்கின்றனர் .   காவல் துறையினரின் தொந்தரவு தாங்கமுடியாமல் , பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருவில்லிப்புத்தூர் பங்குத் தந்தை பிரெஞ்சுச் சாமியார் மாஜி அருளப்பரைச் சந்தித்து ‘நாங்கள் கிறித்தவ மதத்திற்கு மாறுகிறோம் . எங்களை காப்பாற்றுங்கள் ’ என்று கூறுகின்றனர் . மாஜி அருளப்பர் காவல் நிலையத்திற்குச் சென்று , ‘பிரச்சினை என்பது இரு பிரிவினருக்கும் தான் . ஆதலால் , இரு பிரிவினர் மீதும் வழக்குப் பதிவு செய்யுங

வன்முறையை வன்முறையாலும் புனைவை புனைவாலும்... தேவேந்திரர் புராணம்!

தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி? (‘இந்திர தேச சரித்திரம்’ என்ற தொடர் கட்டுரையிலும், ‘பறையர் என்ற பெயரின் உற்பவம்’ என்ற கட்டுரையிலும் பிராமண எதிர்ப்பின் வரலாற்றை கோவில் உரிமைகள், பூஜை புனஸ்காரங்கள் சார்ந்து ஒரு புனைவு போல அயோத்திதாசர் சித்தரித்திருப்பார்.  இப்படியான வரலாறு குறித்து என்னிடம் சில கேள்விகள் இருந்தன:   ‘சாதித் துவேசம் என்பது பிராமணர்களின் சதி’ என்ற வாதம் எவ்வளவு தீர்க்கமான உண்மை? பறையர் சாதிக்கு சொல்லப்படுவது போல தமிழகத்தின் அத்தனை சாதிகளுக்கும் தனித்தனியே ‘பிராமண எதிர்ப்பு’ வரலாறு இருக்க முடியுமா?  அப்படி இருந்தன என்றால் அவை எங்கே? இல்லை என்றால் ஏன் இல்லை?  இதற்காக, வேளாண் சாதி என்று தங்களைப் பெருமையாக அடையாளப்படுத்திக் கொள்ளும் தேவேந்திரர்கள் ‘பிராமண சூழ்ச்சியால்’ இன்றைய இழிநிலையை அடைந்தார்கள் என்று தொனிக்கக்கூடிய புனைவரலாறு ஒன்றை ‘தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி?’ என்ற பெயரில் எழுதினேன்.  அதை அம்மக்கள் மத்தியில் பரவவும் செய்தேன். ஆதியில் அவர்கள் பெளத்தர்களாக இருந்தார்கள் என்றும், போலி பிராமணர்களின் சூழ்ச்சியால் இத்தாழ்நிலை அடைந்தார்கள் என்றும் என்னால் ஏறக