Skip to main content

Posts

Showing posts from 2015

ஜெர்மனிக்குப் போ!!!

வருகிற 28-12-2015 முதல் 28-02-2016 வரை, ஜெர்மனியிலுள்ள ஜார்ஜ் - ஆகஸ்ட் கோட்டிங்கன் பல்கலைக்கழகத்திற்கு வருகைதரு பேராசிரியராக செல்கிறேன்.   நாட்டுப்புறவியல் கல்விப்புலம் இந்த நகரிலிருந்தே தொடங்கியது.  ஜெர்மானிய நாட்டுப்புறக்கதைகளையும் தொன்மங்களையும் தொகுத்து வெளியிட்ட கிரிம் சகோதரர்கள் பேராசிரியர்களாக பணியாற்றிய பல்கலைக்கழகம் இது.   இங்கு வாழ்ந்த காலத்திலேயே அவர்கள் தங்களது முதல் தொகுதியை வெளியிட்டார்கள்.  பின்னாட்களில் அரசை எதிர்த்து கலகம் விளைவித்த பேராசிரிய குழுவில் முக்கிய பங்கினை வகித்தார்கள் என்பதும் வரலாறு.  இந்தப் பல்கலைக்கழகத்திற்கே பணியாற்ற செல்கிறேன்.   நாட்டுப்புறவியலின் தொடக்க புள்ளியை நோக்கி ஏதோ ‘யாத்திரை’ செல்வது போல இருக்கிறது!!! கோட்டிங்கன் பல்கலைக்கழகத்தின் ‘நவீன இந்திய ஆய்வுகளுக்கான மையம்’ மூலமாக ‘ஒடுக்கப்பட்டவர்களின் சமயம்’ என்ற தலைப்பிலான பாடத்திட்டத்தை மாணவர்களுக்கு கற்பிக்க இருக்கிறேன்.  பெளத்தம் தொடங்கி நாட்டுப்புற தெய்வங்கள் ஈறாக ஒவ்வொரு சமயக்கூறுகளையும் சாமானியர்கள் எவ்வாறு விளங்கிக் கொண்டார்கள் என்பதை விளக்கும் பாடத்திட்டம் இது.  ஜெர்மன

சாருவின் பொங்குமாங்கடல்

'சாரு, தன்ன முட்டாள்ங்கறாரே/" 'முட்டாள்னு அறிவிக்கிறார் அவ்வளவு தானே?!' 'என்ன இருந்தாலும், அவர் எழுப்புற தனி மனிதப் பிரச்சினை நியாயமால்லா இருக்கு?   இளையராஜா மாதிரி பிம்பங்களுக்காக தனிமனுஷ வாழ்வாதார உரிமையை பலி கொடுக்க முடியுமா?' 'இன்னும் எமோசனலா நீங்க பேசனும்.   சாருவப் பாருங்க 'நமக்கெல்லாம் தோல் தடித்து விட்டதா?'   எப்படி கேக்குறாரு?   அந்த மாதிரி கோவமா கேளுங்க.   'எளியவர்களுக்கு இந்த உலகில் வாழும் உரிமை இல்லையா?' 'இந்த தேசத்தில் கடவுள், புனிதர், மகான், அறிவுஜீவி மட்டும் தான் வாழ முடியுமா? இப்படி எமோசனோட கேளுங்க'.' 'அதே தான்.   இது அப்பட்டமான தனி மனித உரிமை மீறல்ங்கறேன்!   அந்த ஆள் இனி எந்த மொகத்தோடு இந்த சமூகத்தில் தொடர்ந்து இயங்குவார்?   அவர் வீட்டுக்கு பேப்பர் போடும் பையன் அவரைப் பார்த்து சிரிக்க மாட்டானா?   பஸ்ஸில அவருக்குப் பக்கத்தில யாரும் உக்கார வந்து, 'சீ, இவனா?' ன்னு விலகிப் போக மாட்டாங்களா?   அவரால இனி கௌரவமா வாழத் தான் முடியுமா?' 'இந்தத் தமிழ் சினிமாலெல்லாம் காட்டுவாங

இளையராஜா ஏன் முதல்வர் வேட்பாளர் இல்லை?

(2015 சென்னை வெள்ள நிவாரணப் பணிகளில் செயலாற்றிய நபர்களைப் பாராட்டும் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு , ஊடகங்களைச் சந்தித்த இளையராஜா , ' இந்தப் பேரிடர் நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் கருணையோடு இருக்குமாறு ஏற்படுத்தப்பட்டது ;   ஒரு பூதம் தான் கோபப்பட்டிருக்கிறது .   எனவே இந்தக் கருணையை நாம் இழந்து விடாமல் தக்க வைத்துக் கொள்வது அவசியம் ' என்பது போல் பேசிக் கிளம்ப , ஒரு ஊடகர் , சமீபத்தில் இணையம் வழியாய் வெளியான சிறுபிள்ளைத்தனமான பாடலொன்று பற்றிய கேள்வியைக் கேட்க , அதற்கு இளையராஜா உடனடியாகக் கோபப்பட்டார் .  ' உனக்கு அறிவிருக்கா ? நாம் எதைப் பேசிக்கொண்டிருக்கிறோம் , எதைப் பற்றி கேள்வி கேட்கிறாய் ?' என்பது போலக் கேட்டார் .   இந்த சம்பவம் , சமூக ஊடகங்களில் விவாதத்தை ஏற்படுத்தியது .) 17-12-2015 19.19 ஏன் இது வரை யாரும் இசைஞானியை அடுத்த தமிழக முதல்வராகக் கற்பனை பண்ணி பார்க்கவில்லை ? 18-12-2015 06.41 ஜர்னலிஸ்டுகள் தங்களை மக்களின் குரலாகவே பாவித்துக் கொள்கிறார்களே , ஏன் ? என்ன