Skip to main content

இந்தியா பொய் சொல்கிறது!

ஒவ்வொரு முறை, இந்திய தேசியம், ‘இந்தியைக் கூடுதல் மொழியாக வலியுறுத்தும் போதும் நாம் ஏன் அதை ஆக்ரோஷமாய் தடுக்கிறோம்?




இதற்கு விதவிதமானக் காரணங்களைச் சொல்கிறார்கள்.  அதில் பிரபலமான காரணங்கள் இவை.


1. தமிழர்கள் மொழிவெறியர்கள், அதனால் இந்தியை எதிர்க்கிறார்கள்!

2. இந்தி மூலமாக சமஸ்கிருதமே ஆட்சிக்கு வருகிறது.  சம்ஸ்கிருதமோ வர்ணாஸ்ரமத்தின் வேர்களைப் பாதுகாக்கிறது.  அதனால் இந்தியை அனுமதிக்க முடியாது.

3. இந்தியை விடவும் தமிழே மூத்த மொழி!

4. இந்தி, எந்தவொரு தனித்தன்மையும், இலக்கிய வளமும் இல்லாத மொழி!

5. தமிழ் மொழியை அழித்து விடுவதற்கான சமஸ்கிருத சதி இது!

6. பிராமணர்கள் இந்தியை ஆதரிக்கின்றனர்.  எனவே, நிச்சயமாய் இதில் ஏதோ சதி இருக்கிறது.

7. தாய்மொழி வழிக்  கல்வியே சிறந்தது.

8. தமிழர்களை இரண்டாம்தரக் குடிமக்களாக மாற்றுவதற்கான சதி இது.

9. மொழியை அழிப்பதன் மூலம், ஒரு இனத்தையே அழிக்க முடியும்.

10. மொழியைக் காப்பது என்றால் ஒரு இனத்தின் வரலாற்றை, பண்பாட்டை, விழுமியங்களைப் பாதுகாப்பது என்று பொருள்.

11, 12, 13, ….


இந்தக் காரணங்களில் பலவும் உண்மை; சில, பகுதி உண்மை; வேறு சில, மிகைப்படுத்தப்பட்டவை.  ஆனால், இவை அனைத்தையும் இயக்கிக் கொண்டிருக்கிற, சொல்லப்படாத உண்மையொன்று இருக்கிறது.  அது,


இந்திய தேசியத்தின் மீதான அவநம்பிக்கை!’  


அது எப்பொழுதும் திருட்டுத்தனங்களோடே நம்முன் தோற்றமளிக்கிறது.  அதாவது, ரகசிய அடியறுப்பு வேலைகளோடு.  மத்தியில் எந்தவொரு கட்சி ஆட்சியில் இருந்தாலும் (காங்கிரஸோ அல்லது ஜனதாவோ அல்லது பாஜகாவோ) இந்த அபிப்பிராயம் நமக்கு மாறுவதில்லை.  நாம் தேசியத்தை ஒரு அரசியல் அமைப்பாக ஒத்துக் கொள்கிற வேளையில், அதைப் பண்பாட்டு உணர்வாக ஸ்தாபிக்கிற திட்டத்தோடே இந்திய தேசியம் வளைய வருகிறது.  இதற்காக, இந்தியா எப்பொழுதும் தமிழ் நாட்டின் புறக்கடை வழியாகவே நுழைய முயற்சிப்பது தான் இங்கே முதன்மைச் சிக்கல்.


எந்தவொரு மொழிக் கொள்கையோடும் மத்திய அரசு தலைவாசல் வழி தமிழகத்திற்குள் வரட்டும் என்பது தான் நமது கோரிக்கை.  ஆனால், ‘தேசியம் என்பதே திருட்டுத்தனங்களின் தொகுப்பு தான்எனும் பொழுது, இப்படி நடக்க சாத்தியமே இல்லை.  கூடவே, இந்தத் திருடர்கள் கொல்லை வழி வந்து போக, புறவாசலைத் திறந்து வைக்கும் நபர்களும் வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள் என்பது தான் இப்பிரச்சினையத் தீவிரப்படுத்துகிறது.


பன்னெடுங்காலமாக தமிழகத்தில் எரிந்து கொண்டிருக்கும் இந்த மொழிப் பிரச்சினையின் மையம் இது தான்:  இந்தியா பொய் சொல்கிறது!

Comments

Anonymous said…
மொழிவெறிக்கு இது போன்ற சப்பைக்கட்டுகளை அறிஞர்கள் செய்வதே இந்தியாவின் சாபக்கேடு. சுமதி ராமசாமியின் 'ஃபாஷன் ஆப் டங்க்' நூலெல்லாம் படித்த பின்பும் உங்களைப் போன்றவர்கள் இப்படி எழுதுவது வருத்தமாக இருக்கிறது.
Dhanaraj Rajan said…
The identification of the cultural imperialism as the pretext for the nationalism is a spot on. Well said. Hammer on the nail.

Popular posts from this blog

பால்ய கரகாட்டக்காரி கௌசல்யாவின் கதை

‘நாட்டார் கலைஞர்கள் எவ்வாறு உருவாகுகிறார்கள்?’ என்று தேடிக் கொண்டிருந்த போது தற்செயலாகத்தான் கௌசல்யாவை சந்தித்தேன். ‘நானும் கலைஞர் தான், சார்’ என்று வந்து நின்ற சிறுமிக்கு பதிமூன்று, பதினான்கு வயது இருக்கலாம். ‘நீயா?’ ‘ஆமா, சார்’, சங்கோஜத்தோடு சொன்னாள். நான் சந்தேகப்படுகிறேன் என்று தெரிந்ததும், பக்கத்தில் நின்றிருந்த மாரியம்மாளை ‘நீ சொல்லும்மா, அப்ப தான் நம்புவாங்க’ என்பது போல பார்த்தாள். அதற்கு மாரியம்மா, ’ரெண்டு வருசமா இவ ஆடி தான் சார் சாப்புடுறோம்’ என்றார்.  சிறுமி கெளசல்யா, ஒரு கரகாட்டக் கலைஞராம்!   அந்தத் தற்செயல் இப்படித்தான் நடந்தது.  ஒரு பால்ய கரகாட்டக்காரியை நான் முதல் முறையாகச் சந்திக்கிறேன். ************ நான் பார்க்க வந்தது மாரியம்மாளை.  அவர் ஒரு மேனாள் கரகாட்டக்கலைஞர்.  வயது ஐம்பதுக்குள் இருக்கலாம்.  கரகாட்டக்கலைஞர்கள் சீக்கிரமே ஓய்வு பெற்றுவிடுகிறார்கள். பெண் கலைஞர்கள் என்றால் இன்னும் வேகமாக, முப்பத்தைந்தை தாண்ட மாட்டார்கள்.   'ஓய்வு' என்பது கூட தவறான வார்த்தை தான்.     நாட்டார் கலைஞர்களுக்கு 'ஓய்வு' என்பதே கிடையாது.  கலைஞர்க

5 கலவரங்களும் கதையாடல்களும்

5   கலவரங்களும் கதையாடல்களும்  க . இராமபாண்டி   விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டத்தில் புதுப்பட்டி எனும் ஊர் உள்ளது . இவ்வூரில் 18 வகைச் சாதியினர் உள்ளனர் . இங்கு 1918ஆம் ஆண்டிலிருந்து 2000ம் ஆண்டு வரை பல்வேறு காரணங்களால் சாதிய மோதல்கள் நடைபெற்று வந்துள்ளன .   1918 - ஆம் ஆண்டு பறையர்களுக்கும் (அப்பொழுது 70 குடும்பங்கள்) பண்ணாடிகளுக்கும் (150 குடும்பங்கள்) சுடுகாட்டுப் (பறையர்கள் பயன்படுத்திய சுடுகாட்டை பண்ணாடிகள் பயன்படுத்தியதால்) பிரச்சினை ஏற்பட்டு பண்ணாடி சமூகத்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர் . காவல் துறையினர் பறையர்களில் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்கின்றனர் .   காவல் துறையினரின் தொந்தரவு தாங்கமுடியாமல் , பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருவில்லிப்புத்தூர் பங்குத் தந்தை பிரெஞ்சுச் சாமியார் மாஜி அருளப்பரைச் சந்தித்து ‘நாங்கள் கிறித்தவ மதத்திற்கு மாறுகிறோம் . எங்களை காப்பாற்றுங்கள் ’ என்று கூறுகின்றனர் . மாஜி அருளப்பர் காவல் நிலையத்திற்குச் சென்று , ‘பிரச்சினை என்பது இரு பிரிவினருக்கும் தான் . ஆதலால் , இரு பிரிவினர் மீதும் வழக்குப் பதிவு செய்யுங

வன்முறையை வன்முறையாலும் புனைவை புனைவாலும்... தேவேந்திரர் புராணம்!

தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி? (‘இந்திர தேச சரித்திரம்’ என்ற தொடர் கட்டுரையிலும், ‘பறையர் என்ற பெயரின் உற்பவம்’ என்ற கட்டுரையிலும் பிராமண எதிர்ப்பின் வரலாற்றை கோவில் உரிமைகள், பூஜை புனஸ்காரங்கள் சார்ந்து ஒரு புனைவு போல அயோத்திதாசர் சித்தரித்திருப்பார்.  இப்படியான வரலாறு குறித்து என்னிடம் சில கேள்விகள் இருந்தன:   ‘சாதித் துவேசம் என்பது பிராமணர்களின் சதி’ என்ற வாதம் எவ்வளவு தீர்க்கமான உண்மை? பறையர் சாதிக்கு சொல்லப்படுவது போல தமிழகத்தின் அத்தனை சாதிகளுக்கும் தனித்தனியே ‘பிராமண எதிர்ப்பு’ வரலாறு இருக்க முடியுமா?  அப்படி இருந்தன என்றால் அவை எங்கே? இல்லை என்றால் ஏன் இல்லை?  இதற்காக, வேளாண் சாதி என்று தங்களைப் பெருமையாக அடையாளப்படுத்திக் கொள்ளும் தேவேந்திரர்கள் ‘பிராமண சூழ்ச்சியால்’ இன்றைய இழிநிலையை அடைந்தார்கள் என்று தொனிக்கக்கூடிய புனைவரலாறு ஒன்றை ‘தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி?’ என்ற பெயரில் எழுதினேன்.  அதை அம்மக்கள் மத்தியில் பரவவும் செய்தேன். ஆதியில் அவர்கள் பெளத்தர்களாக இருந்தார்கள் என்றும், போலி பிராமணர்களின் சூழ்ச்சியால் இத்தாழ்நிலை அடைந்தார்கள் என்றும் என்னால் ஏறக