Skip to main content

Posts

Showing posts from 2018

96 - தமிழ்க் காதல் மொழி

ஜானுவைப் பார்த்ததும் ராம் துவண்டு போகிறான்.  மற்றவர்கள் முன்னிலையில் ஜானுவுடன் சகஜமாகப் பேசவோ பழகவோ அவனால் முடிவது இல்லை.  ஜானுவோ படு இயல்பாக இருக்கிறாள்.   ராம் அடையும் சங்கோஜம் அவளுக்கும் நன்றாகவே தெரிகிறது.  எனவே, கூடுமானவரை  ரகசியமாக அவனோடு பேசத் தொடங்குகிறாள்.  ‘என்னாச்சு?’ என்று ஜாடையிலேயே கேட்பது.  ஒரக்கண்ணால் பார்ப்பது, திரும்பிப் பார்த்து  சிரிப்பது.  அவன் விரும்புகிற பாடலை மட்டும் பாடாமல் அலைய விடுவது. ‘வாய் திறந்து தான் கேளேன்…’ என்று சீண்டுவது.  அவன் பிறர் முன்னிலையில் எதையும் / எதுவும் கேட்க மாட்டான் என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும்.  அதை ரசிக்கவும் செய்கிறாள்.  ஆனாலும், தனது சீண்டல்களை அவள் எங்கும் நிறுத்துவது இல்லை.   இந்தச் சீண்டல்களுக்கே நாம் ‘காதல் மொழி’ என்று பெயர் வைத்திருக்கிறோம். காதல், முரண்பட்ட இரண்டு குணாம்சங்களுக்குள் நிகழ்கிறது என்றொரு சொலவடை உண்டு.  96ல் இது ஆணின் சங்கோஜமாகவும், பெண்ணின் தைரியமாகவும் காட்டப்படுகிறது.  இந்தக் கூச்சம் / தைரியம் என்றால் என்ன?   ராமின் சங்கோஜத்திற்கானக் காரணங்கள் வெளிப்படையாய்ச் சொல்லப்படுவது இல்லை. 

நமது நாவல்கள் ஏன் உச்சம் பெறுவது இல்லை?

சுபிட்ச முருகனின் அடிப்படையான சிக்கல் உடலுறவு.  இன்னும் குறிப்பாகச் சொல்வதானால், உடலுறவுக்கு முன்னும் பின்னும் தோன்றும் மன மாறுபாடுகள்.  உடலளவில் தோன்றும் கோளாறுகளுக்கு ஊழ்வினை தான் காரணமோ என்று கதாநாயகன் குழம்பிக் கொள்கிறான்.   அவ்வூழை அறுத்தெறிவதற்காக பழனி மலைக்கு வந்து சேர்கிறான்.  எச்சில் சாமியார் மேற்பார்வையில் முருகனின் அருளும், வாக்கும் அவனுக்குக் கிடைக்கிறது.  ‘போய் விவசாயம் பண்ணு!’ என்று முருகன் அவனுக்கு அருள் சொல்கிறார்.     அவனது உடலுறவுச் சிக்கல் இப்படியாகத் தீர்த்து வைக்கப்படுகிறது. ************ தமிழில் வேளாண்மை, வன்கலவி போலவே கற்பனை செய்யப்பட்டிருக்கிறது.  அதுவும், ஆண்மை மேலோங்கிய வல்லுடலுறவு.  இதற்கு எதிரிணையாக, கேரளத்தை சாக்காகக் கொண்ட பெண்மை மேலோங்கிய சம்போகம் என்ற கற்பனையும் நம்மிடம் உண்டு.  வேட்டையை விடவும், மீன்படித்தலை விடவும் அதிகபட்ச பெண் பங்களிப்பைக் கொண்ட விவசாய உணவு உற்பத்தி முறையை ஆண் குணமாகக் கற்பனை செய்வதற்கே நமது மரபு பழக்கியிருக்கிறது. வேளாண்மை குறித்து நமக்கு நினைவிலிருக்கும் சித்திரங்களை யோசித்துப் பாருங்கள்.  குறைந்த ஒளியில் எடுக்

ஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்?

தமிழகத்தின் ஆகப்பெரிய பிரச்சினை, எல்லாவற்றையும் சம்பவமாக மட்டுமே பார்த்தல். தூத்துக்குடிப் படுகொலை விஷயத்திலும் அதுவே நடந்து கொண்டிருக்கிறது.  அது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவமாம்.  அதாவது, தற்செயலாக நடந்ததாம்.  அந்த துரதிர்ஷ்டமும், தற்செயலும் தற்போதைய ஆட்சியாளர்களால் ஏற்பட்டது என்று நம்ப வேண்டுமாம்.  ஆளுங்கட்சி மட்டுமல்ல, அவர்களை எதிர்ப்பவர்களும் இதைத் தான் சொல்கிறார்கள். ஆனால், தூத்துக்குடிப் படுகொலைகள் ‘திட்டமிடப்பட்ட விபத்து’ மட்டும் தானா? ‘இல்லை’ என்பது எல்லோருக்கும் தெரியும்.  கீழ்வெண்மணி, பரமக்குடி, தாமிரபரணி, மேலவளவு, உஞ்சனை எல்லாம் நமக்கு வெறும் பெயர்கள் அல்ல.  இதே போன்ற ‘திட்டமிடப்பட்ட விபத்துகள்’ நடந்த இடங்கள்.  அதனால், நம் எல்லோருக்குமே தெரியும் -  தூத்துக்குடிப் படுகொலை நிச்சயமாய் ஒரு விபத்து இல்லை.   அது, தமிழக அரசின் இயல்பு.  இந்த நிமிடம் வரைக்கும் அக்கொடூர குணத்தை நியாயப்படுத்தும் வாதத்தை தான் அரசின் குரலாக நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். ஜனநாயக வழியிலான போராட்டங்களை ஒடுக்கும் கொடுங்கோலனாகத் தான் தமிழக அரசு வளர்ந்து வந்திருக்கிறது.  அதன்

தூத்துக்குடிப் படுகொலைகள்: தமிழ் மக்கள் என்ற கற்பனை!

நேற்றிரவும் நான் உறங்கவில்லை.  ஸ்டெர்லெட் ஆலையை எதிர்த்து தூத்துக்குடியில் நடைபெற்ற கிளர்ச்சியில் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் ஓலம் இன்னும் கேட்டுக் கொண்டிருக்கிறது. அதை விடவும், அதில் கலந்து கொண்டவர்களின் பரிதவிப்பும் நிராதரவான கூக்குரலும் மிக அருகில் கேட்டுக் கொண்டிருக்கிறது. இந்தக் காலையிலும், என் அருகே யாரோ அலறுவது போலவே இருக்கிறது.  கடக்க முடியாத நாட்களின் சமூகமாக மாறிக்கொண்டிருக்கிறோம்.  என்னிடமிருந்த கடிகாரம் நின்று விட்டது. காலம் உறைந்து விட்டதாய் எனக்குச் சொல்கிறார்கள்.  உறைந்து விட்டது என்றால், ஏன் ஒரே மாதிரியான சம்பவங்கள் திரும்பத் திரும்ப நடக்கின்றன என்று நான் கேட்டேன்.  தாமிரபரணியிலும் இப்படி நடந்தது; பரமக்குடியிலும் இப்படி நடந்தது; மேலவளவிலும் இதே தான்; ஈழத்திலோ அரக்கத்தனமாய் நடந்தது. காலம் உறைந்தது என்றால் இவையெல்லாம் எப்படி சாத்தியம்? அப்படியானால், ஒரே இடத்தில் காலம் சுழல்கிறதா, ஒரு கடிகாரத்தைப் போல? ஒரு நாள் என்பது 24 மணி நேரம் இல்லை; அது, நூற்றாண்டுகளாக விரியக்கூடியது என்கிறான் வரலாற்றாசிரியன்.  இந்த நூற்றாண்டு மக்களாட்சியில் விடிந்தது என்பதை அவன் நமக

நிர்மலாதேவி விவகாரம்: நவீன தேவதாசி முறை

இந்த ஒட்டுமொத்த விவகாரத்திலும், நம்பிக்கை அளிக்கக்கூடிய ஒரே ஒரு விஷயம் உண்டு என்றால் அது ‘அந்த நான்கு மாணவிகளின் துணிச்சல்’.   அந்தத் துணிச்சலின் மூலம் அவர்கள் மிக முக்கியமான ஒரு செய்தியை நமக்குச் சொல்லியிருக்கிறார்கள் - ஒழுக்கம் ஒற்றைத்தன்மையானது! ‘வேண்டாம்!’ என்று மறுக்கிற அந்த மாணவிகளுக்கு நிர்மலாதேவி தொடர்ந்து ஆசை காட்டுகிறார்.   எந்த முயற்சியும் இல்லாமலேயே அவர்களால் அதிக மதிப்பெண்களைப் பெறமுடியும்;  கல்வி உதவித்தொகைகள் வழங்கப்படும்;  மாதா மாதம் வரும்படி வரும்; நிரந்தர வேலை என்ற உத்தரவாதமும் உண்டு.  அதாவது அவர்கள் ஒரு பொன்னுலத்தினுள் அடியெடுத்து வைக்கப் போகிறார்கள்.  இதற்காக  அந்தப் பெண்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று தான் - சுய ஒழுக்கத்தை மாற்றி யோசிக்க வேண்டும்.   இருபது நிமிடங்கள் போல நிர்மலாதேவி பேசியதன் சாராம்சம் இவ்வளவு தான் - அறம், இடத்திற்கு இடம், நபருக்கு நபர், சூழலுக்கு சூழல் மாறக்கூடியது.   காலம் மாறிக் கொண்டிருக்கிறது என்று போதிக்கிறார் நிர்மலாதேவி; அதனால் விழுமியங்களும் மாறிக் கொண்டிருக்கின்றன என்பது அவரது வாதம்.  இந்த காலத்தில் இப்படிச்